மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல்-மே மாத காலக்கட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக பெரும் உத்வேகத்துடன் களம் கண்டுவருகிறது.
பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் விரைவில் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்யவுள்ளன.
2016ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்து, அதில் காங்கிரஸ் 92 இடங்களிலும், இடதுசாரிகள் 202 இடங்களிலும் போட்டியிட்டன. இம்முறை காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட விரும்புவதாகவும் இந்த தொகுதிப் பங்கீடு தொடர்பான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான ஆலோசனையில், மேற்கு வங்க காங்கிரஸ் பொறுப்பாளர் ஜிதின் பிரசாதா, அம்மாநில காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்திரி உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி: பத்திரிகையாளர்களுக்கும் முன்னுரிமை வழங்க கோரிக்கை!