கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், பாங்குரா மாவட்டத்தில் உள்ள கேஷிகோல் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்தி தத்தா. இவர் குடும்ப அட்டைக்காக தொடர்ந்து மூன்று முறை விண்ணப்பித்தும் கிடைக்காமல் அரசு அலுவலகத்திற்கு அழைந்து வந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு வழங்கப்பட்ட அட்டையில் அவரது பெயரானது தவறாக ஸ்ரீகாந்தி குத்தா என அச்சிடப்பட்டிருந்தது.
இந்தி மொழியில் குத்தா என்றால் நாய் என்ற அர்த்தம் இருப்பதால், ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்தி நேற்று (நவ-19)வட்டாட்சியரிடம் நாய் போல் குரைத்து அவரது பெயரை திருத்துமாறு கோரிக்கை விடுத்தார். இவர் கோரிக்கை விடுத்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்ரீகாந்தின் கோரிக்கைக்கு பின்னர் அந்த அதிகாரி அவரது மனுவை பெற்றுக்கொண்டார். இதற்கிடையில் ஈடிவி பாரத்திற்கு பேட்டியளித்த ஸ்ரீகாந்த் கூறுகையில், ‘ மூன்றாவது முறையாக விண்ணப்பித்தபோது எனது பெயர் ஸ்ரீகாந்தி தத்தா என்பதற்குப் பதிலாக ஸ்ரீகாந்தி குத்தா (இந்தியில் 'நாய்') என்று இருந்தது. இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்,"எனத் தெரிவித்தார்.
மேலும் ''எனது ரேஷன் கார்டில் எனது பெயரைத் திருத்த கடந்த ஒரு வருடமாக முயற்சித்து வருகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் எனது பெயர் தவறாகப் பதிவிடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, நான் விரக்தியடைந்து, அவர்கள் என்னை சித்தரித்த விதத்தில் எதிர்ப்புத் தெரிவிக்க முடிவு செய்தேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க:மாமூல் கேட்ட காவலர்: வீடியோ எடுத்து ஓடவிட்ட வாகனஓட்டி