ETV Bharat / bharat

மேற்கு வங்கம் தேர்தல்: திதியை (மம்தா) மாநிலத்திற்கு மீண்டும் வரவேற்கிறோம் - west bengal

பிஷி-பைபோ (அத்தை-மருமகன்) பிணைப்பை பற்றி  பிஜேபி தலைவர்கள் எவ்வளவு அதிகமாக தாக்கினாலும், யோகி ஆதித்யநாத் போன்ற பாஜக தலைவர்கள் மால்டா போன்ற மாவட்டங்களில் வங்காளத்தில் ரோமியோ எதிர்ப்பு குழுக்களை உருவாக்குவது என்ற உயர் கோஷங்களுடன் பரப்புரை செய்தபோதும்,  மம்தா பானர்ஜி அடிமட்டத்தில் தனது வலிமையை பலப்படுத்தினார் . இதுகுறித்து விளக்குகிறார் ஈடிவி பாரத் செய்தி ஒருங்கிணைப்பாளர் தீபங்கர் போஸ்.

WB Assembly
மேற்கு வங்கம் தேர்தல்
author img

By

Published : May 2, 2021, 7:24 PM IST

“கெலா ஹோப்” (விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது) என்று அவர் கூறினார், அது சரித்திரமாக இருப்பதா அல்லது சரித்திரத்தை உருவாக்குவதா என்பதை பற்றிய கேள்வியாக இருந்தது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டபோது, வங்காள மக்கள் பிந்தையதை தேர்ந்தெடுத்தது தெரியவந்தது. இப்போது, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, “கேலா ஹோலோ” (விளையாட்டு முடிந்துவிட்டது) என்று சொல்லலாம்.

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் மீண்டும் வெற்றிபெறுவதால், தொடர்ந்து மூன்றாவது முறையாக, பல கேள்விகள் இன்று எழுகின்றன. திரிணாமுலின் ஆட்சிக்கு எதிரான அலை மற்றும் ஆதரவின்மை போன்றவற்றை வென்று, மம்தா பானர்ஜி இன்றைய வங்காள அரசியலில் மிக உயரமான நபராக வெளிப்படுகிறார். இரண்டாவதாக, இன்றைய வெற்றியின் பின்னர், மத்தியில்உள்ள பாஜக எதிர்ப்பு கட்சிகளில் மம்தா பானர்ஜி ஒரு முன்னணி நபராக உருவெடுத்தார். அவரது வெற்றி திரிணாமுலின் தேசிய விருப்பங்களையும், இந்திய அளவில் அவரை ஏற்றுக்கொண்டதையும் உறுதி செய்தது.

வங்காளத்தின் நிலைமையை நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால், பாஜகவின் வாக்கு பிளவு பரப்புரை, மத அடிப்படையில் வாக்காளர்களைத் பிளவுபடுத்துவது, என்பது அவர்களுக்கு எதிராக மாறியது தெரிகிறது. மால்டா மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டங்களிலிருந்தும், தெற்கு 24 பர்கானாக்கள், வடக்கு 24 பர்கானாக்கள் மற்றும் ஹவுரா மாவட்டங்களில் வந்த முடிவுகள், முஸ்லிம் சிறுபான்மை வாக்காளர்கள் வேறு எந்தக் கட்சியையும் விட திரிணாமுல் காங்கிரஸைத் தேர்ந்தெடுத்துள்ளன என்பதைக் காட்டுகிறது. முன்பு காங்கிரஸ் கோட்டையாக இருந்த மால்டா மற்றும் முர்ஷிதாபாத் இந்த முறை மம்தா பானர்ஜிக்கு மொத்தமாக ஆதரவளித்தனர். அறிகுறி மிகவும் தெளிவாக உள்ளது. மம்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் பாஜகவை நிராகரிக்க அவர்கள் மம்தாவையும் அவரது திரிணாமுல் காங்கிரஸையும் தேர்ந்தெடுத்தனர்,

மொத்தத்தில், இடது முன்னணி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஏ.ஐ.எஸ்.எஃப் ஆகியவற்றின் பாரம்பரிய வாக்காளர்களும் திரிணாமுல் காங்கிரஸைத் தேர்ந்தெடுத்ததால் வங்காளத்தின் மூன்றாவது அணிக்கான இடம் சுருங்கிவிட்டன.

மீண்டும், உண்மை எளிமையானது. பாஜகவின் 2019 ஆதிக்கத்தை நிறுத்த அவர்கள் வாக்களித்தனர். 2019ஆம் ஆண்டில் 18 மக்களவைத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதால், . பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் செல்வாக்கிலும், மற்றும் கட்சி தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கைலாஷ் விஜயவர்கியா, பி.எல்.சந்தோஷ் மற்றும் அரவிந்த் மேனன் போன்ற தலைவர்கள் தயாரித்த தேர்தல் வியூகம் மூலம் தோராயமாக 121 சட்டமன்ற இடங்கள் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் களமிறங்கியது. ஆனால், மம்தா பானர்ஜி மற்றும் அவரது ஆலோசகர்கள் உருவாக்கிய திட்டத்தை அவர்கள் கட்சி பார்க்கத் தவறியது .

பிஷி-பைபோ (அத்தை-மருமகன்) பிணைப்பை பற்றி பிஜேபி தலைவர்கள் எவ்வளவு அதிகமாக தாக்கினாலும், யோகி ஆதித்யநாத் போன்ற பாஜக தலைவர்கள் மால்டா போன்ற மாவட்டங்களில் வங்காளத்தில் ரோமியோ எதிர்ப்பு குழுக்களை உருவாக்குவது என்ற உயர் கோஷங்களுடன் பரப்புரை செய்தபோதும், மம்தா பானர்ஜி அடிமட்டத்தில் தனது வலிமையை பலப்படுத்தினார் .

அவரிடம் இரண்டு சக்திவாய்ந்த செய்திகள் இருந்தன - முதலாவதாக, டுவாரே சர்க்கார் (உங்கள் வீட்டு வாசலில் அரசாங்கம்) திட்டம், இது சமூக பயனாளிகளின் திட்டங்களை பதிவுசெய்து பயன்படுத்த முகாம் அலுவலகங்களில் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. டுவாரே சர்க்கார் திட்டத்தில் ஒன்றான ஸ்வஸ்திய சத்தி அட்டை, ஒவ்வொரு வீட்டின் மூத்த பெண் உறுப்பினர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டது. இது மம்தாவுக்கு பெண் வாக்காளர்களின் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்தது. பின்னர், திரிணாமுல் காங்கிரசின் ‘போஹிரகோட்டோ’ (வெளிநபர்) என்ற பரப்புரை வெற்றிகரமான கோஷமாக இருந்தது. திரிணாமுல் காங்கிரஸின் ‘பங்களா நிஜர் மேய் கீ சாயே’ (வங்கம் தனது சொந்த மகளை விரும்புகிறது) என்ற பரப்புரை, வங்காள அரசியலில் மிகச்சரியாக எதிரொலித்தது.

ஆயினும்கூட, பாஜக சட்டசபையில் சுமார் 80 இடங்களைப் பெறக்கூடிய நிலையில் உள்ளது. 2016 முதல் பாஜகவிற்கு 3 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். அரசியல் கணக்கில், 2019 மக்களவை தேர்தலில், காவி கட்சி வெறும் இரண்டு இடங்களிலிருந்து 18 இடங்களை வென்றது. ஆனால், இந்த முறை அரசியல் வேதியியல் அரசியல் கணக்கை முந்தியது.

தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ராஜ்பன்ஷிகள் அதிகமாக உள்ள வட வங்காளத்தில், குறிப்பாக ஜல்பைகுரி, அலிபூர்துவார் மற்றும் கூச் பெஹார் மாவட்டங்கள், மாதுவா வாக்காளர்கள் அதிகம் உள்ள வட 24 பர்கானாஸ் மாவட்டங்கள் பாஜகவிற்கு சாதகமாக அமையவில்லை.

தேர்தல் ஆலோசனை நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது வேலையை அப்படியே வைத்திருக்கிறார். வங்காள சட்டமன்றத்தில் முதல் முறையாக எதிர்க்கட்சியாக பாஜக நுழைகிறது. இடது முன்னணியும் அதன் கூட்டணி கட்சிகளும் மீண்டும் எதிலும் வெல்லவில்லை. ஆனால், 2021ஆம் ஆண்டின் இந்த கோடைகாலத்தில் மம்தா பானர்ஜி ஒரு வெற்றிபெற்ற தலைவராக சென்று, தேசிய அரசியலில் தனது இருப்பை வெளிப்படுத்த 2024ஆம் ஆண்டிற்கான தனது காத்திருப்பைத் தொடங்குவார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.