புதுச்சேரி: உப்பளம் விளையாட்டுத் திடலில் ஆறரை அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று சுற்றித் திரிந்தது. அதனைப் பார்த்த நடைப்பயிற்சியில் ஈடுபட்ட சிலர் பயந்து ஓடினர்.
அப்பொழுது குயவர்பாளையத்தைச் சேர்ந்த சுனில் என்பவர் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் வருவதற்குள் பாம்பை அந்த இளைஞர் துணிச்சலாக கைகளில் பிடித்து வந்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
இளைஞரைப் பாராட்டிய வனத்துறையினர் பாம்பை வனப்பகுதியில் விட்டுவிடுவோம் என உறுதியளித்தனர்.
இதையும் படிங்க: குடியிருப்புப் பகுதிகளுக்கு மேல் அடிக்கடி ஹெலிகாப்டர் பறப்பதாகப் புகார்