மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்கம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்டார். புரில்லா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "மேற்கு வங்கத்தின் வளர்ச்சி இடதுசாரிகளின் பிடியில் சிக்கி மோசமடைந்தது. பின்னர் மம்தாவும் மாநிலத்திலிருந்து தொழிற்சாலைகளை விரட்டியடித்தார்.
மாநிலத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க மம்தா தவறிவிட்டார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்பு, தாய் மொழியில் கல்வி ஆகியவற்றை வழங்குவோம்.
எனவே, மேற்கு வங்க மக்கள் வளர்ச்சி வேண்டும் என்றால் பாஜகவைத் தேர்வுசெய்யுங்கள். ஊழலும், திறனற்ற அரசு வேண்டும் என்றால் மம்தாவின் திருணமூல் ஆட்சியைத் தேர்வுசெய்யுங்கள்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 14 நாள்களுக்கு முன்னதாகவே நிறைவடைந்த மக்களவைக் கூட்டத்தொடர்