ETV Bharat / bharat

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; சத்தீஸ்கரில் 'ட்ரை டே' அறிவிப்பு! - dry day in tamil

Ram Mandir inauguration: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஜனவரி 22ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் ட்ரை டே (dry day) என அறிவிக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளார்.

Ram Mandir inauguration
அயோத்தி ராமர் கோயில் திறப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 3:57 PM IST

ராய்ப்பூர்: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம், வருகிற 22ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக 3 ஆயிரம் விஐபிகள் உள்பட சுமார் 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் உள்பட சுமார் 15 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கில் பக்தர்களின் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்காக 45 சமூக உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டு, தினமும் 25 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 22 जनवरी को छत्तीसगढ़ में उत्सव का शुभ दिन

    छत्तीसगढ़ सरकार ने दिनांक 22 जनवरी, 2024 को भगवान श्री रामलला जी की मूर्ति की प्राण प्रतिष्ठा के शुभ अवसर पर छत्तीसगढ़ में 'शुष्क दिवस' (Dry Day) घोषित किए जाने का निर्णय लिया है।

    — Vishnu Deo Sai (@vishnudsai) January 2, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதற்காக மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அனுப்பப்படுகிறது. ராஜஸ்தானில் இருந்து சுமார் 600 கிலோ நெய் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதே போன்று அந்தந்த மாநிலங்களில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், இந்தியாவின் அரிசியின் கிண்ணம் என அழைக்கப்படும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ரைஸ் மில்ஸ் சார்பில் சுமார் 3 ஆயிரம் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் சார்பில் காய்கறிகளும் ஜன.22ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்திற்காக அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு சாய், “அனைவருக்கும் தெரியும், நாங்கள் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை நல்லாட்சி வாரத்தை கொண்டாடி வருகின்றோம். இதற்கான எங்களது லட்சியம் மற்றும் உறுதி ராம ராஜ்ஜியமாகும். அதற்காக ரைஸ் மில் அமைப்புகள் சார்பாக, சுமார் 3,000 டன் அரிசி சத்தீஸ்கரில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

விவசாயிகள் தரப்பில் காய்கறிகள் அனுப்பப்பட உள்ளது. ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உற்சாகமாக உள்ளது. அன்றைய தினம் மாநிலம் முழுவதும் வீடுகளில் தீபம் ஏற்றப்பட்டு, தீபாவளி போன்று ஜொலிக்கும்” என ராஜ்பூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில முதமைச்சர் விஷ்ணு தியோ சாய் அவரது சமூகவலைத்தளப் பக்கத்தில், "ஜனவரி 22ஆம் தேதி அன்று சத்தீஸ்கரில் நல்ல நாள் கொண்டாடப்படும், 2024 ஜன.22-ம் தேதியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் அந்த நேரத்தில், சத்தீஸ்கர் மாநிலத்தில் 'ட்ரை டே' (dry day) என அறிவிக்க முடிவு செய்துள்ளதாக" பதிவிட்டுள்ளார். ட்ரை டே என்பது மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நாளாக கருதப்படுகிறது.

மேலும், அயோத்தியில் புதுப்பிக்கட்ட விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேலும் பல்வேறு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் எந்தெந்த எதிர்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிழவுகிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்ரே அணியைச் சேர்ந்த சஞ்சய் ராவத், தனது கட்சியைச் சேர்ந்த எந்த தலைவர்களும் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக இருக்கமாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தரப்பில் சோனியா காந்தி வருவாரா என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், அவர் நிகழ்ச்சிக்கு வர வாய்ப்புள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பல எதிர்கட்சித் தலைவர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான அழைப்புகளை ஏற்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தாளவாடி அருகே உலாவரும் காட்டு யானைகள்.. பொதுமக்கள் அச்சம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.