ETV Bharat / bharat

இந்திய மணமகன்... பாகிஸ்தான் மணமகள்... வீடியோ காலில் திருமணம்...! - 138 நாளுக்குப் பின் கணவர் வீட்டை அடைந்த மணமகள்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த இளைஞருக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் ஆன்லைனில் திருமணம் நடந்த நிலையில், 138 நாட்களுக்குப் பிறகு மணமகள் தனது புகுந்த வீட்டை அடைந்துள்ளார்.

virtual Nikaah
பாகிஸ்தான்
author img

By

Published : May 25, 2023, 7:17 PM IST

புகுந்த வீட்டை அடைந்த மருமகள்
புகுந்த வீட்டை அடைந்த மருமகள்

ஜோத்பூர்: கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு விர்ச்சுவல் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. பெருந்தொற்று காலத்தில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு பயணம் செல்ல முடியாததால், ஜூம் போன்ற ஆன்லைன் செயலிகள் மூலமாக திருமணங்கள் நடந்தன. இப்போது கொரோனா கட்டுப்பாடுகளை இல்லாத சூழலிலும், பல்வேறு காரணங்களால் விர்ச்சுவல் திருமணங்கள் நடக்கின்றன.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த முஜ்மல் கான் என்ற இளைஞருக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த உருஷ் பாத்திமா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் வீடியோ கான்பரன்சிங்கில் திருமணம் நடந்துள்ளது. முஜ்மல் கான் ஓட்டுநராக பணிபுரிகிறார். இரு வீட்டாரும் பொருளாதார வசதி இல்லாத சாதாரண குடும்பத்தினர் என்பதால், எளிமையான முறையில் வீடியோ கான்பரன்சிங்கில் திருமணத்தை நடத்தியுள்ளனர்.

திருமணம் முடிந்த பிறகு, மணமகளை புகுந்த வீட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், விசா கிடைப்பதில் சற்று தாமதமானதால், 138 நாட்களுக்குப் பிறகு மணமகள் இப்போது புகுந்த வீட்டிற்கு வந்துள்ளார். மணமகள் உருஷ் பாத்திமா நேற்று(மே.24) தனது கணவர் வீட்டை அடைந்துள்ளார். இதனால், குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். மணமகள் வருகையால் அவர்களது வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது. உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அனைவரும், முஜ்மல் கான் வீட்டிற்கு சென்று பாகிஸ்தானைச் சேர்ந்த மருமகளை ஆவலுடன் விசாரித்துச் செல்கின்றனர்.

இவர்களது திருமணத்தை வீடியோ கான்பரன்சிங்கில் நடத்த முஜ்மல் கானின் தாத்தா பால்ஹே கான் மெஹர் ஏற்பாடு செய்துள்ளார். காலத்திற்கும் தேவைக்கும் ஏற்றார்போல் பாரம்பரியத்தை மாற்றுவது அவசியம் என்று மெஹர் கூறுகிறார்.

இது தொடர்பாக பேசிய பால்ஹே கான் மெஹர், "நான் பாகிஸ்தான் போயிருந்தேன். அப்போது, உருஷ் பாத்திமாவை சந்தித்தேன். அவர் எனக்கு நிறைய உதவிகளை செய்தார். எனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டதால், எனது பேரனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினேன். அதன்படி திருமணம் உறுதி செய்யப்பட்டது. ஆனால், இந்தியா- பாகிஸ்தான் இடையே இயக்கப்பட்ட ரயில் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. நாங்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் எங்களால் விமானத்தில் சென்று திருமணம் முடிக்க முடியாது. எனவே, வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்து கொண்டோம்.

நிக்காஹ் முடிந்து மணமகளை இந்தியா அழைத்து வர நினைத்தோம். ஆனால், விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் மருமகள் இப்போதுதான் வந்து சேர்ந்துள்ளார். மருமகளை வாகா எல்லை வழியாக ஜோத்பூருக்கு அழைத்து வந்தோம். வாகா எல்லை வரை மருமகளின் உறவினர்கள் வந்தனர். நாங்களும் நேரில் சென்று அழைத்து வந்தோம்.

விசா கிடைக்க 7 முதல் 8 மாதங்கள் ஆகும் என கூறினார்கள். நாங்கள் இது தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து கோரிக்கை வைத்தோம். அவரது உதவியால் சற்று விரைவாக விசா கிடைத்தது. எங்களைப் போலவே இந்தியாவில் உள்ள பலரது உறவினர்களும் பாகிஸ்தானில் இருக்கிறார்கள். அவர்களை சந்திக்க ஏதுவாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: கரோனாவின் மத்தியில் இணைந்த காதல் மனங்கள் - உக்ரைனில் புதுமையான முறையில் திருமணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.