ETV Bharat / bharat

விசில் அடித்ததும் பறந்துவரும் வௌவால்கள்; பழங்கொடுத்து பசி தீர்க்கும் புதுச்சேரிக்காரர்! - புதுச்சேரி வௌவால்கள் பழம் உண்ணும் வைரல் வீடியோ

புதுச்சேரி அடுத்த கன்னியக்கோயிலில் விசில் அடித்து அழைத்தவுடன் பறந்து வந்து கையில் இருக்கும் பழத்தை வௌவால்கள் சாப்பிட்டுவிட்டு செல்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளன.

VIRAL VIDEO OF PUDUCHERRY BAT EATS FRUIT FROM MAN HAND, viral video of puducherry bats
விசில் அடித்ததும் பழந்தின்ன பறந்துவரும் வௌவ்வால்கள்
author img

By

Published : Dec 2, 2021, 2:44 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி கன்னியக்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை கிருஷ்ணன். அதேபகுதியில், டேங்க் ஆப்ரேட்டாக உள்ளார். இவருக்கு புதுச்சேரி - கடலூர் சாலையில் சொந்தமாக வணிக வளாகம் உள்ளது.

இந்த வளாகத்தில் ஐந்து தேன்பழம் மரங்கள் இருந்தன. இதில், காய்க்கும் பழங்களை அணில்கள், வௌவால்கள் வந்து சாப்பிடுவது வழக்கம். இதை செந்தாமரை கிருஷ்ணன் தினமும் கண்காணித்து வந்துள்ளார்.

வௌவால்களின் வழக்கம்

இந்நிலையில், அந்த தேன்பழம் மரங்கள் சமீபத்தில் வீசிய காற்றில் சாய்ந்தன. இதனால், வழக்கம்போல் வந்த வௌவ்வால்கள் அந்த பகுதியில் பழம் கிடைக்காமல் சுற்றித் திரிந்தன. இதைக்கண்ட செந்தாமரை கிருஷ்ணன் அங்குள்ள மதில் சுவர், காரின் மீது வாழைப்பழங்களை வைத்துள்ளார். அதை வௌவ்வால்கள் சாப்பிட்டு சென்றுள்ளன.

விசில் அடித்ததும் பழந்தின்ன பறந்துவரும் வௌவ்வால்கள்

இதையடுத்து, அவர் தனது கையில் பழத்தை வைத்துக்கொண்டு விசில் அடித்து அழைத்துள்ளார். செந்தாமரை கிருஷ்ணன் அழைத்தவுடன் வௌவால்கள் ஒவ்வொன்றாக வந்து அமர்ந்துகொண்டு அவரது கையில் இருந்த பழத்தை நிதானமாக சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளன.

வீடியோ வைரல்

இதை அவர் தினமும் கடைபிடித்த நிலையில், வௌவால்களும் வந்து சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. செந்தாமரை கிருஷ்ணனின் இந்தச் செயலை அவரது நண்பர் ஒருவர் வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: Be careful: யார் ஏரியாக்குள்ள, யாருடா லந்து கொடுக்குறது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.