(பீகார்): காயமடைந்த குரங்கு ஒன்று நேற்று (ஜூன்7) தனது குட்டியுடன் நீண்ட நேரமாக ஷாஜுமா பகுதியில் உள்ள கால்நடைகளுக்கான கிளினிக் ஒன்றின் வெளியே காத்திருந்தது. அதைக் கண்ட மருத்துவர் காயத்திற்கு சிகிச்சைக்காக வந்து இருப்பதை புரிந்துகொண்டு உள்ளே அழைத்து சென்றார்.
பின் உள்ளே சென்றதும், அந்த குரங்கு விரைந்து ஏதோ மருத்துவனைக்கு வந்து செல்லும் நோயளியைப் போல, சட்டென்று மருத்துவரின் அருகில் நோயாளிகள் அமரும் இருக்கையில் பக்குவமாக அமர்ந்துகொண்டது.
இதைத் தொடர்ந்து, மருத்துவர் சிகிச்சை அளிக்கும்போது, வழக்கமாக அருகில் செல்ல முயன்றாலே முகம் சிவந்து நிற்கும் குரங்குகளுக்கு மத்தியில் காயத்தை சுத்தம் செய்வதற்காக மருத்துவர் ஒரு பேண்டேஜை வெளியே எடுத்து முகத்தின் அருகே கொண்டு போக அதை அந்தக் குரங்கு உற்று நோக்கியபடி இருந்தது.
பொதுவாக குரங்கை யாராவது தொட முயன்றாலே கடும் கோபம் கொள்ளுகிற பிற குரங்குகளுக்கு இடையே, இந்த குரங்கின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை அப்பகுதியில் இருந்த ஏராளமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் கண்டு ஆச்சரியமடைந்தனர். இது குறித்த காணொளி வேகமாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: Watch Video: என் தங்கச்சி நயன்தாராவிற்கு கல்யாணம்..! - கூல் சுரேஷ்