டெல்லி: வெஸ்டர்ன் கலாசார முறையில் வாழ விரும்பும் மக்கள், உணவு, ஆடை உள்ளிட்டவைகளை தாண்டி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதிலும் மேற்கு உலக கலாசாரத்தை கடைபிடிப்பது கடந்த சில நாட்களாக காணப்படுகிறது.
கிராமங்களில் பெருமளவு வெஸ்டர்ன் காலாசரம் குறித்து தெரியவராத நிலையில், நகரம் மற்றும் பெருநகரங்களில் அது வேரூன்றி கிளை விடும் அளவுக்கு வளர்ந்து இருப்பது தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் தலைநகர் டெல்லியில் போதை பழக்கத்திற்கு அடிமையான அப்தாப் அமின் பூனவாலா என்ற இளைஞர், தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்த ஷரத்தா வாக்கர் என்ற பெண்ணை கொடூரமாக கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கொலை நடந்து ஆறு மாதங்கள் கழித்து ஷ்ரத்தாவிற்கு நடந்த கொடூரம் வெளிவந்தது. அதேநேரம் ஷ்ரத்தா போன்று பல பெண்களுக்கு நடந்த வன்முறைகள் வழக்குகளோடு நின்று இருளில் மூழ்கிக் கிடப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
தலைநகர் டெல்லியில் மட்டும் கடந்த ஓராண்டில் லிவ் இன் ரிலேஷன்ஷிப் முறையில் வாழும் ஜோடிகளுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் காரணமாக 560 வழக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் கூறியிருப்பதாவது, டெல்லியில் பதிவான 560 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். வீட்டை விட்டு தூரமாக வந்த நிலையில், காண்காணிக்க ஆளில்லை என்ற தைரியத்தில் கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதே பல்வேறு குற்றங்களுக்கான காரணம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!