ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம்-எஸ் மூலம் 3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் இன்று (நவம்பர் 18) செலுத்தப்பட்டன. இந்த நிகழ்வில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய விண்வெளி திட்டத்தில் இது புதிய தொடக்கம். நாட்டின் ஆராய்ச்சி, மேம்பாடு, கல்வி மற்றும் தொழில்துறையின் ஒருங்கிணைப்பு காரணமாக விண்வெளித்துறையில் புரட்சி ஏற்பட்டுள்ளது. விண்வெளித்துறையில் அரசு - தனியார் பங்களிப்புக்கு வழிவகுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இயக்கத்தில் இது ஒரு திருப்புமுனை.
இஸ்ரோவின் பெருமிதம் கொள்ளத்தக்க சாதனைகளில் மேலும் ஒன்றாக இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது. இது இந்தியாவை முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவாக்கியுள்ளது. குறைந்த செலவில் செயற்கைக்கோள் செலுத்துவதில் வரலாற்று சிறப்புமிக்க இன்றைய நிகழ்வு அனைத்து நிறுவனங்களுக்கும் சமவாய்ப்பை அளிக்க உதவுகிறது. விண்வெளித்துறையில் கடந்த 2 ஆண்டுகளில் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்திய விண்வெளித்துறை அண்மைக்காலத்தில் தொலைதூர மருத்துவம், ரயில்வே, நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கியமான துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவின் தனியார் விண்வெளித்துறை ஏற்கனவே ஏறுமுகத்தில் இருக்கின்றன. எனத் தெரிவித்தார்.
-
LIVE: Launch of VIKRAM-S Suborbital Flight (PRARAMBH Mission) from Sounding Rocket Complex, Sriharikota. #OpeningSpaceForAll https://t.co/IyQS5DI9Nd
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) November 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">LIVE: Launch of VIKRAM-S Suborbital Flight (PRARAMBH Mission) from Sounding Rocket Complex, Sriharikota. #OpeningSpaceForAll https://t.co/IyQS5DI9Nd
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) November 18, 2022LIVE: Launch of VIKRAM-S Suborbital Flight (PRARAMBH Mission) from Sounding Rocket Complex, Sriharikota. #OpeningSpaceForAll https://t.co/IyQS5DI9Nd
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) November 18, 2022
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் உதவியுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. ப்ராரம்ப் (தொடக்கம்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, என்-ஸ்பேஸ்டெக் இந்தியா, பஸூசும் அர்மீனியா ஆகிய செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. 80 கிலோகிராம் எடை கொண்ட இவை தனியார் நிறுவனத்தின் கலாம் 80 உந்துவிசையை பயன்படுத்தி 545 கிலோகிராம் எடைகொண்ட ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டன.
நாட்டின் தனியார் நிறுவனங்களுக்கு இஸ்ரோவின் ஆதார வளங்களை பயன்படுத்துவதற்கான புதிய ஒழுங்குமுறை ஆணையமான இன்-ஸ்பேஸ் மூலம் இந்த செயற்கைக்கோள் செலுத்துவதன் நடைமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதலாவது தனியார் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டது.
இதையும் படிங்க: விண்ணில் பாய்ந்தது விக்ரம் எஸ் ராக்கெட்