ETV Bharat / bharat

சந்திரபாபு நாயுடு கைது; அக்.5 வரை காவல் நீட்டிப்பு!

AP Skill development corporation scam: மத்திய சிறையில் இரண்டு நாள் சிஐடி விசாரணை முடிந்த நிலையில் காணொளிக் காட்சி மூலமாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடுவிற்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ap-skill-devt-corpn-scam-cid-completes-chandrababu-naidus-two-day-interrogation-in-jail
முன்னாள் முதலவர் என்.சந்திரபாபு நாயுடுவிற்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
author img

By PTI

Published : Sep 24, 2023, 8:25 PM IST

ராஜமகேந்திராவரம் (ஆந்திரா): திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், செப்டம்பர் 22ஆம் தேதி விஜயவாடாவிலுள்ள சிறப்பு நீதிமன்றம் சிஐடி விசாரணைக்காக இரண்டு நாட்கள் (செப் 23 மற்றும் செப் 24) காவலில் வைக்க உத்தரவிட்டது.

  • Vijayawada ACB court extends TDP chief and former CM Chandrababu Naidu's remand upto October 5th in connection with the alleged skill development scam.

    — ANI (@ANI) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தற்போது மத்திய சிறையில் இரண்டு நாள் விசாரணை முடிந்துள்ளது. இதனையடுத்து, இன்று (செப்.24) காணொளிக் காட்சி மூலமாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடுவிற்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி, ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் சிஐடி அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவை விசாரணை செய்ய (செப் 23 மற்றும் செப் 24) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். மேலும், நீதிமன்ற உத்தரவின்படி, சந்திரபாபு நாயுடு அவருடைய வழக்கறிஞர் உடன் பேச 5 நிமிடம் ஒதுக்கப்பட்டது.

இன்று (செப்.24) இரண்டாம் நாள் விசாரணை முடிந்த பின்னர், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சிஐடி காவல் துறையினர் சிறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர் என சிறைத்துறை டிஐஐி எம்.ஆர்.ரவி கிரண் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின்படி மாலை 5 மணிக்கு ப்ளூ ஜீன்ஸ் என்ற மொபைல் செயலி மூலமாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு காணொளிக் காட்சி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் எனவும், மேலும் ப்ளூ ஜீன்ஸ் என்பது கைதிகளை ஆன்லைன் உபயோகப்படுத்தி காணொளிக் காட்சி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பயன்படுத்தப்படும் மொபைல் செயலி எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மணிப்பூர் கலவரம்; இன்று முதல் இணையதள சேவை மீண்டும் தொடக்கம்!

காணொளிக் காட்சி மூலமாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடுவிற்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிஐடியைச் சேர்ந்த மூன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.

மேலும் 6 காவல் அதிகாரிகள் ஒரு வீடியோகிராபர் மற்றும் இரண்டு அதிகாரப்பூர்வ மத்தியஸ்தர்கள் முன்பு விசாரணை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒரு மணி நேர விசாரணைக்குப் பின் ஐந்து நிமிடங்கள் சந்திரபாபு நாயுடுவின் வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வரின் உடல்நிலை மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் சிஐடி காவல் துறையினர் ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் விசாரணை செய்துள்ளனர்.

இதையும் படிங்க: சந்திரபாபு நாயுடு கைது; உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.