திருவனந்தபுரம்: குழந்தைகள் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் கீடெக்ஸ், கேரளா மாநிலத்தில் இயங்கி வந்தது. மாநில அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கு இருந்த நிலையில், கேரளாவிலிருந்து விலகி தெலங்கானவில் முதலீடு செய்யப்போவதாக அந்நிறுவனத்தின் தலைவர் சாபு ஜேக்கப் (ஜூலை 9) ஆம் தேதி அதிரடியாக அறிவித்தார்.
முதற்கட்டமாக தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "தொழில்துறையில் சில ஆண்டுகளுக்கு முன் பிரச்னை இருந்ததை கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது அந்த நிலை இல்லை. கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தற்போது பிரச்னை எழுப்பப்படுகிறது. உள்நோக்கத்துடன் சில நிகழ்வுகள் நடைபெறுகிறது" என கீடெக்ஸ் ஆடை நிறுவனப் பிரச்னை குறித்து மறைமுகமாக சாடியுள்ளார்.
இதையும் படிங்க: ரூ. 3500 கோடி ப்ராஜெக்ட்' - கேரளாவின் ரெட் சிக்னலால் களத்தில் இறங்கிய தெலங்கானா!