ETV Bharat / bharat

புத்தாண்டு கொண்டாட வெளிநாடு புறப்பட்ட விஜய் வர்மா, தமன்னா காதல் ஜோடி! - புத்தாண்டு கொண்டாட்டத்தில் விஜய் வர்மா தமன்னா

Tamannaah Bhatia: காதல் ஜோடிகளாக வலம் வரும் விஜய் வர்மா, தமன்னா ஆகியோர் புத்தாண்டு கொண்டாட மும்பையிலிருந்து வெளிநாடு புறப்பட்டு சென்றனர்.

புத்தாண்டு கொண்டாட வெளிநாடு புறப்பட்ட விஜய் வர்மா தமன்னா காதல் ஜோடி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 1:13 PM IST

Updated : Dec 27, 2023, 1:45 PM IST

ஹைதராபாத்: ஒவ்வொரு ஆண்டு இறுதி நாட்களில் பாலிவுட் நட்சத்திரங்கள் வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று புத்தாண்டு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், ஏற்கனவே கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா அனன்யா பாண்டே மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் புத்தாண்டு கொண்டாட வெளிநாடுகளுக்கு சென்றுள்ள நிலையில் பாலிவுட்டின் புது காதல் ஜோடியான விஜய் வர்மா மற்றும் தமன்னா ஆகியோர் புறப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட வெளிநாடு புறப்பட்ட விஜய் வர்மா தமன்னா காதல் ஜோடி
புத்தாண்டு கொண்டாட வெளிநாடு புறப்பட்ட விஜய் வர்மா தமன்னா காதல் ஜோடி

இன்று காலை மும்பை விமான நிலையத்திலிருந்து கிளம்பிய இந்த காதல் ஜோடி, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டும், ஊடகத்தினருடன் கலந்துரையாடி விட்டும் சென்றனர். விஜய் வர்மா, தமன்னா ஆகிய இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இருவரும் கோவாவில் ஒன்றாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

மேலும் விஜய் வர்மா, தமன்னா ஆகிய இருவரும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 இணையத் தொடர் படப்பிடிப்பு முதல் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. சமீபத்தில் விஜய் வர்மா சிறந்த நடிகருக்கான ஆசியன் அகாடமி விருது தகாத் படத்திற்காக வழங்கப்பட்டது.

மேலும் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல் தமன்னாவும் இந்த வருடம் ஜி கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2, ஜெயிலர் ஆகிய வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: "என்னை வெறுப்பவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை" - நடிகர் சிவகார்த்திகேயன் அதிரடி!

Last Updated : Dec 27, 2023, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.