ETV Bharat / bharat

பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் காட்டு யானை...! அவலத்தை தடுக்க வேண்டுகோள்! - latest news in tamil

Elephant Eating plastic: கேரளா மாநிலம் மூணாரில் காட்டு யானை ஒன்று பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் வீடியோ விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் காட்டு யானை
பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் காட்டு யானை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 4:58 PM IST

பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் காட்டு யானை

கேரளா (மூணார்): தென்னகத்தின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் கேரளா மாநிலத்தில் உள்ள மூணார், தென்னிந்தியாவின் சுற்றுலா தளங்களுள் மிகவும் முக்கியமான தலமாகும். இதனால் மூணாருக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மூணார் சுற்றுலா தளம் வனப்பகுதி நிறைந்த இடமாக திகழ்வதால், காட்டு யானை, காட்டெருமை, மான், வரையாடு போன்றவை அடிக்கடி வனபகுதியில் இருந்து வெளியேறி, உணவு தேடி பொது இடங்களுக்கு வந்து செல்வது வழக்கம்.

வன விலங்குகளை காணும் பொதுமக்கள், புகைப்படம் எடுப்பதோடு, அதற்கு சில சமயங்களில் தாங்கள் கொண்டு வரும் உணவு மற்றும் தின்பண்டங்களை வழங்குவர். இந்த நிலையில், அவ்வாறு உணவு தேடி வந்த காட்டு யானை ஒன்று மூணார் அருகே அமைக்கப்பட்டு உள்ள பொது குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

யானை பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் சம்பவத்திற்கு பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகளை உணவாக எடுத்துக் கொள்வதால் காட்டு யானை உட்பட வனவிலங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருப்பதால், இதனை தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கைகள் விடுத்து உள்ளனர்.

இதுநாள் வரையில் கால்நடைகளான மாடுகள், ஆடுகள் போன்றவை பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு வந்த நிலையில், இப்போது காட்டு யானைகளும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் அவலம் ஏற்பட்டுள்ளதாக விலங்கு நல ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: சிறுமுகை அருகே தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த பாகுபலி யானை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.