ஐந்து மாநிலத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் இன்று வெளியாகிவருகின்றன. நாட்டில் கோவிட்-19 இரண்டாம் அலைப் பரவல் உச்சமடைந்துவருவதால், வாகனப் பேரணி, கூட்டம் கூடி வெடிவெடித்தல் போன்ற தேர்தல் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதையும் மீறி பல இடங்களில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இந்நிலையில், ஐந்து மாநில தலைமைச் செயலர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய உத்தரவை இட்டுள்ளது. அதில், தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது எஃ.ஐ.ஆர். பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Election Results Live Updates: மாலை 4.30 மணி நிலவரம்