டெல்லி: கப்பற்படை தலைவர் துணை அட்மிரல் ஜி அசோக் குமார் பணிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், துணை அட்மிரல் எஸ்என் கோர்மேட், கப்பற்படையின் புதிய தலைவராக சனிக்கிழமை (ஜூலை 31) பொறுப்பேற்றுக்கொண்டார்.
எஸ்என் கோர்மேட் ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஊழியர் தலைமையகத்தில் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி துணைத் தலைவராக இருந்தார். மேலும், கிழக்கு கடற்படை கட்டளையின் தலைமை அதிகாரியாகவும் கோர்மேட் பணியாற்றியுள்ளார்.

1984 ஜனவரி 1ஆம் தேதியன்று கடற்படையில் பணிக்கு சேர்ந்த கோர்மேட் தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA), புனே கடக்வாஸ்லா, அமெரிக்காவின் கடற்படை பணியாளர் கல்லூரி, நியூபோர்ட், ரோட் தீவு மற்றும் மும்பை கடற்படை போர் கல்லூரி ஆகியவற்றில் பட்டம் பெற்றுள்ளார்.
இதுமட்டுமின்றி கடலுக்குள் வழிசெல்லுதல் ஆய்வுக்காக அட்மிரல் மும்பை பல்கலைக்கழகத்தில் எம்பில் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றுள்ளார்.

2017ஆம் ஆண்டு குடியரசுத் தினத்தில் எஸ்என் கோர்மேட்டுக்கு சிறந்த சேவைக்கான அதி விசிஷ்ட சேவா (Ati Vishisht Seva) விருதும், 2007இல் கப்பற்படையின் வீரதீர விருதுமான நௌ சேனா ( Nau Sena) விருதும் குடியரசுத் தலைவர் கைகளால் வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : கப்பற்படை விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி ஸ்வரூப்!