ETV Bharat / bharat

"காந்திக்குப் பிறகு மோடிதான்..." - அமெரிக்காவில் மூத்த பத்திரிகையாளர் அஜய் சிங் பேச்சு! - அஜய் சிங்

மகாத்மா காந்திக்குப் பிறகு இந்திய சமூகத்தின் உளவியல் குறித்த ஆழமான புரிதல் பிரதமர் மோடிக்குதான் இருக்கிறது என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் செய்தித் தொடர்பாளரும், மூத்த பத்திரிகையாளருமான அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

Mahatma Gandhi
பிரதமர் மோடி
author img

By

Published : Jul 24, 2023, 2:28 PM IST

நியூயார்க்: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் செய்தித் தொடர்பாளரும், மூத்த பத்திரிகையாளருமான அஜய் சிங், பிரதமர் மோடி குறித்து 'தி ஆர்கிடெக்ட் ஆஃப் தி நியூ பிஜேபி' (The Architect of the New BJP) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம், இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இப்புத்தகம் நேற்று(ஜூலை 23) அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. நியூ ஜெர்சி மாகாணத்தில் இந்தோ-அமெரிக்கன் ஆர்ட்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு இந்த புத்தக வெளியீட்டு விழாவை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய புத்தகத்தின் ஆசிரியர் அஜய் சிங், பிரதமர் மோடி குறித்தும், 'தி ஆர்கிடெக்ட் ஆஃப் தி நியூ பிஜேபி' புத்தகம் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "பிரதமர் மோடி இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளார். அவருக்கு இந்திய சமூகம் பற்றி ஆழமான புரிதல் உள்ளது. இது பல்வேறு பிரச்சினைகளைக் கையாள அவருக்கு பலத்தை அளித்துள்ளது. நான் புத்தகத்தில் இதைப் பற்றி விரிவாக எழுதியுள்ளேன். எனது ஆய்வின்படி, காந்திக்குப் பிறகு பிரதமர் மோடியைப் போல இந்திய சமூகத்தின் உளவியலைப் பற்றி ஆழமான புரிதல் வேறு யாரும் இல்லை.

பிரதமர் மோடியின் பேச்சுத்திறன், அரசியல் சித்தாந்தம், அவர் செய்த வளர்ச்சிப் பணிகள் போன்றவைதான் அவரது வெற்றிக்கு காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால், இந்த காரணங்களை வைத்து பாஜகவின் வளர்ச்சி குறித்து துல்லியமாக விளக்க முடியாது. உண்மையில் பாஜகவின் வளர்ச்சியை வைத்தே பிரதமர் மோடியின் வெற்றியை விளக்க முடியும்.

பிரதமர் மோடி பாஜகவை விரிவுபடுத்தினார். குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இருந்த பாஜகவின் புவியியல் எல்லைகளை விரிவுபடுத்தினார். அதற்கு அவர் வழக்கமான அல்லது பாரம்பரிய நுட்பங்களை மட்டும் நம்பவில்லை, தொடர்ந்து புதிய வழிகளை ஆய்வு செய்து பயன்படுத்தினார்.

ஒரு கட்சி எவ்வளவு விரிவடைகிறதோ, அந்த அளவுக்கு அதன் சித்தாந்தம் நீர்த்துப் போகும். ஆனால், மோடி விஷயத்தில் இது நேர்மாறாக உள்ளது. அவர் புதிய ஆதரவாளர்களைக் கட்சிக்கு கொண்டு வந்தார். அதனால், பாஜகவின் சித்தாந்தம் மேலும் வலுவானது. மேலும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களையும் கட்சிக்கு கொண்டு வந்தார்.

பிரதமர் மோடி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, வேளாண் சட்டங்கள் போன்ற சில முக்கிய பிரச்சினைகளில் விசாலமான பார்வையுடன் செயல்பட்டார். தேசிய ஒருமைப்பாடு, தேசப் பாதுகாப்பு என்று வரும்போது சுய கெளரவத்தைப் பிடித்துக் கொண்டு இருக்காமல், விரிவான தெளிவான பார்வையில் அதனை கையாண்டார்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஒருபுறம் மக்கள் போராட்டம், மறுபுறம் பிரதமருக்கு பேஸ்மேக்கர் பொருத்தம் - என்ன நடக்கிறது இஸ்ரேலில்?!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.