ஜம்மு - காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இருந்து குரேஸ் நோக்கி சென்ற இரண்டு வாகனங்கள் ரஸ்தான் உச்சியில் பனியில் நேற்று (டிச.19) சிக்கின. தகவலறிந்து வந்த ராணுவத்தினர் வாகனத்திலிருந்த பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
வாகனங்கள் மீட்பு
பனியில் சிக்கிய வாகனங்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக இன்று (டிச.20) ஜம்மு-காஷ்மீர் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
பனிப்பொழிவு
டிசம்பர் 12ஆம் தேதி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் முதல் பனிப்பொழிவு தொடங்கியது. இந்த பருவத்தின் கடும் குளிர் நேற்று பதிவாகியது. வெள்ளை போர்வையால் மூடப்பட்டது போல ஜம்மு-காஷ்மீர் காட்சியளிக்கும் நிலையில், கடுங்குளிரைப் பொருட்டுப்படுத்தாமல் இதைக் கண்டு களிக்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகைபுரிகின்றனர்.
இதையும் படிங்க: கடுங்குளிர்...பனிப்பொழிவுக்கு முன் உறைந்த தால் ஏரி!