ETV Bharat / bharat

திருட்டு பயம்... பவுன்சர்களை பணியமர்த்தி தக்காளி விற்பனை...Thug life வியாபாரி! - Vegetable vendor hires bouncers protect tomatoes

திருட்டு உள்ளிட்டவைகளை சமாளிக்க பவுன்சர்களை பணி அமர்த்தி, வியாபாரி தக்காளி விற்பனை செய்து வரும் சம்பவம் உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் அரங்கேறி உள்ளது.

Vendor
Vendor
author img

By

Published : Jul 9, 2023, 6:56 PM IST

வாரணாசி : உத்தர பிரதேசத்தில் பவுன்சர்களை பணி அமர்த்தி வியாபாரி தக்காளி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பருவம் தவறுதல், வரத்துக் குறைவு, பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு கிலோ தக்காள் 250 ரூபாய் வரை விற்கப்படுவதால் நடுத்தர மக்கள் விழி பிதுங்கி காணப்படுகின்றனர். எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தக்காளி விலை உயர்ந்து உள்ளதால், அதை பதுக்கி கொள்ளை விலைக்கு விற்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது.

தக்காளியின் மவுசு அதிகரித்து காணப்படும் நிலையில், சில இடங்களில் அதை திருடும் சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகிறது. கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தின் கோனி சோமனஹள்ளி கிராமத்தில் பெண் விவசாயியின் இடத்தில் இருந்து 50 முதல் 60 தக்காளி மூட்டைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த ஜூலை 5 ஆம் தேதி திருடிச் சென்றதாக கூறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏறத்தாழ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தக்காளியை விவசாய நிலத்தில் இருந்து சிலர் திருடிச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. விலை உயர்வு காரணமாக திருட்டுச் செயல்கள் அதிகரித்து காணப்படும் நிலையில், அதற்கு தீர்வு காணும் விதமாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு வியாபாரி நூதன முயற்சியை கையாண்டு உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த அஜெய் பவுஜி, பவுன்சர்களை பணி அமர்த்தி தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். உத்தர பிரதேசத்தில் தக்காளி கிலோ 160 ரூபாய் வரை விற்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சிலர் தக்காளிகளை திருடிச் செல்வதாக கூறப்படுகிறது.

இதை தடுக்க அஜெய் பவுஜி, பவுன்சர்களை பணி அமர்த்தி உள்ளார். அதேநேரம் இந்த பவுன்சர்கள் தக்காளிகளை தொட்டு பார்த்து வாங்க அனுமதிக்க மறுப்பதால் நல்ல தக்காளிகளை தேர்வு செய்து வாங்குவது கடினமாக உள்ளதாகவும், 10 உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தினருக்கு சமைக்க 3 தக்காளிகளை 35 ரூபாய் விலை கொடுத்து வாங்கி உள்ளதாகவும் வாடிக்கையாளர் ஒருவர் வேதனை தெரிவிக்கிறார்.

இதையும் படிங்க : கர்நாடகாவில் சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தக்காளிகள் திருட்டு - டைமிங் அபேஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.