ETV Bharat / bharat

மகாராஷ்டிராவிடமிருந்து கைநழுவிய வேதாந்தா ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் திட்டம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமையவிருந்த மெகா வேதாந்தா ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் திட்டம் குஜராத்திற்கு மாற்றப்பட்டது எதிர்க்கட்சிகளிடையே விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

author img

By

Published : Sep 14, 2022, 10:56 PM IST

மஹாராஸ்டிராவிடமிருந்து கைநழுவிய வேதாந்தா ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் திட்டம்...எதிர்கட்சிகள் விமர்சனம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அமையவிருந்த மெகா வேதாந்தா ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் திட்டம் குஜராத்திற்கு மாற்றப்பட்டு வேதாந்தா – ஃபாக்ஸ்கான் குழுமத்துடன் ரூ.1.54 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குஜராத் அரசு கையெழுத்திட்டுள்ளது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவில் ஆட்டோமொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் தொழில்கள் அதிநவீன குறைக்கடத்திகளைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், இந்தியாவில் தற்போது இந்த குறைக்கடத்திகளுக்கு பெரும் தட்டுப்பாடு உள்ளது. எனவே, குறைக்கடத்திகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட வேண்டும். இதற்காக மகாராஷ்டிர மாநிலம், புனே அருகே இந்தத் திட்டம் அமைக்கப்பட இருந்தது.

இதுதொடர்பாக அப்போதைய மகாராஷ்டிர அரசு பல கூட்டங்களை நடத்தியது. தைவானில் உள்ள ஃபாக்ஸ்கான் மற்றும் சுரங்கத்துறையில் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் இணைந்து மகாராஷ்டிராவில் குறைக்கடத்தி ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளன. இப்போது இந்தத்திட்டம் குஜராத்தில் செய்யப்பட உள்ளது.

சிவசேனா தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே, முந்தைய மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ.) அரசாங்கம் இந்தத்திட்டத்தை கிட்டத்தட்ட இறுதி செய்துள்ளது என்று கூறியிருந்தார். 1,54,000 கோடி முதலீடு செய்து வேதாந்தா-ஃபாக்ஸ்கான் நிறுவனம் மூலம் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கக்கூடும். அவை இப்போது கைதவறிப்போய் உள்ளது எனக்குற்றம்சாட்டியுள்ளார்.

ஆட்சிக்கு வந்த பிறகு, ஷிண்டே ஃபட்னாவிஸ், தைவானில் உள்ள ஃபாக்ஸ்கான் மற்றும் இந்தியாவின் வேதாந்தா குழுமத்துடன் செமிகண்டக்டர் ஆலையை அமைப்பதற்காக ஒரு சந்திப்பையும் நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து எம்ஐடிசி தனது ட்விட்டர் கைப்பிடியில் இருந்து, கூட்டம் 26 ஜூலை 2022 அன்று நடைபெற்றதாகவும், விரைவில் மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேதாந்தா ஃபாக்ஸ்கானின் செமிகண்டக்டர் திட்டம் குஜராத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்றிரவு பேச்சுவார்த்தை நடத்திய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தொழில் திட்டங்கள் மற்றும் முதலீடுகளுக்கு ஒத்துழைப்பைக் கோரியுள்ளார்.

இந்தச்சூழலில், மாநிலத்திற்கு இதே போன்ற அல்லது சிறந்த திட்டம் கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார் என தானேயில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தொழில்துறை அமைச்சர் உதய் சமந்த் இதுகுறித்தான தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குஜராத் அரசு வேதாந்தா–ஃபாக்ஸ்கான் குழுமத்துடன் ரூ.1.54 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.