ETV Bharat / bharat

விமான நிலைய கழிவறையில் 16 கிலோ தங்கம்.. வாரணாசியில் நடந்தது என்ன? - varanasi customs team seized gold biscuits

வாரணாசி லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலைய கழிவறையில் வியாழக்கிழமை (ஜூன் 01) ரூ.1.12 கோடி மதிப்புடைய தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 2, 2023, 5:39 PM IST

வாரணாசி: லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலைய கழிவறையில் வியாழக்கிழமை (ஜூன் 01) ரூபாய் 1.12 கோடி மதிப்புடைய தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தங்கத்தை யார் வைத்தது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. விமான நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின்படி, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஐஎக்ஸ் 184' என்ற விமானம் வியாழக்கிழமை (ஜூன் 01) இரவு தாமதமாக விமான நிலையத்தை வந்தடைந்ததை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இந்தத் தகவல் கிடைத்துள்ளது.

ஷார்ஜாவில் இருந்து வாரணாசி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் ஏராளமான தங்கத்துடன் பயணி ஒருவர் வந்துள்ளார். வழக்கமான சோதனை முடிந்ததும் பயணிகள் அனைவரும் கலைந்து சென்றுள்ளனர். இதனை அடுத்து வழக்கம் போல கழிவறைகளை ஆய்வு செய்ததில், சிறுநீர் கழிப்பிடத்தின் அருகே பொருட்கள் உள்ளடக்கியது போன்ற சந்தேகம் படும்படியாக கருப்பு நிற பிளாஸ்டிக் பை ஒன்று பொட்டலமாக கிடந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் பார்த்துள்ளனர்.

இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பையை கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதிலிருந்து 16 தங்க பிஸ்கட்டுகள் கிடைத்துள்ளது. இந்த தங்க பிஸ்கட்களை எடைபோட்டு பார்த்தபோது, 1866.100 கிராம் இருப்பது தெரியவந்துள்ளது மேலும் இதன் விலை சுமார் ரூபாய் 1.12 கோடி மதிக்கதக்கதாக இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தை கொண்டுவந்த நபரை அடையாளம் காண, தற்போது சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலைய வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறும்போது, "சர்வதேச விமானம் விமான நிலையத்திற்குப் பயணிகள் வந்த பிறகு இது மாதிரியான சோதனைகள் வழக்கமான நடத்தப்படுவதுதான் என்றும். பல சந்தர்ப்பங்களில், ஷாஜாவிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கொண்டு வரப்படுவதாகக் கிடைக்கும் தகவலைத் தொடர்ந்து, சோதனைகள் செய்யப்பட்டுக் கடத்தி வரப்படும் தங்கங்கள் மீட்கப்பட்டு வருகிறோம் என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், சில பயணிகள் வரி ஏய்ப்பு செய்து சர்வதேச தரத்தில் தங்கத்தை கொண்டு வருகிறார்கள். விமான நிலையங்களில் சுங்க விசாரணைக்கு கணிசமான நேரம் எடுக்கும் இந்த நேரத்தில், பயணிகள் கழிவறைகளுக்குச் சென்று தங்கத்தை மறைத்து வைத்துவைக்கிறன்னர். இப்படியாக மறைத்து வக்கப்பட்ட தங்கத்தை தான் தற்போது சுங்க பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். விமான நிலையத்தின் பிரதான முனைய கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் கழிவறை நோக்கி செல்லும் பாதையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மன்னார் வளைகுடாவில் கோடிக்கணக்கில் தங்கம்! மூன்று நாள் முயற்சியில் மீட்டெடுத்த அதிகாரிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.