ETV Bharat / bharat

ராமரின் ஆட்சியே எனது ஆட்சிக்கு உத்வேகம் - பிரதமர் மோடி - சப்கா சாத் சப்கா விகாஸ்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் நடந்த தீப உற்சவ திருவிழாவில் பிரதமர் மோடி முதன்முறையாகப் பங்கேற்று, உரையாற்றினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 23, 2022, 11:04 PM IST

அயோத்யா(உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராம் கதா பூங்காவில், ராமர் மற்றும் சீதையின் அடையாள முடிசூட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

அக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, தனது பாக்யத்தால் கடவுளின் "தரிசனம்" பெறும் வாய்ப்பைப் பெற்றதாகக் கூறினார்.

மேலும் அவர், ராம் கதா பூங்காவில் தனது உரையின்போது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை பாஜக அரசின் மந்திரம் என பிரதமர் மோடி கூறினார். இந்நிகழ்வின்போது, அங்கு ஆற்றங்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட 15.76 லட்சம் மண் விளக்குகள் தன்னார்வலர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “ராமர் தனது வார்த்தைகள், எண்ணங்கள் மற்றும் ஆட்சியின் மூலம் புகுத்திய அனைவர் வளர்ச்சிக்கும் அனைவரும் உதவவேண்டும் என்னும் விழுமியங்களே எனது ஆட்சிக்கான உத்வேகம். இந்த தீப உற்சவ நிகழ்வை உலக மக்கள் கண்டுகளிக்கிறார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

'75ஆவது சுதந்திர அமிர்தப் பெருவிழாவினை' நாம் கொண்டாடும் போது, ராமர் வலியுறுத்திய உறுதிப்பாடு நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்" என்றார்.

"ராமரின் லட்சியங்கள் அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க விரும்பும் மக்களுக்கு ஒளி விளக்கு என்றும், மிகக் கடினமான இலக்குகளை அடைவதற்கான தைரியத்தை" வழங்குவதாகவும் பிரதமர் கூறினார்.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி, ராமர் கோயில் கட்டுவதற்கான "பூமி பூஜை" க்குப் பிறகு பிரதமர் மோடி அயோத்திக்கு வருவது இதுவே முதல் முறையாகும். இன்றைய தீப உற்சவ விழாவுக்காக அயோத்தியை அடைந்த பிரதமர், உடனடியாக ராமர் கோயிலுக்குச் சென்று ராமரை வணங்கினார். அங்கு மண் விளக்கை ஏற்றி "ஆராத்தி" எடுத்தார்.

அந்த இடத்தில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டும் பணிகள் குறித்தும் மோடியிடம் அலுவலர்கள் விளக்கமளித்தனர். முன்னதாக பிரதமரை ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர்.

இதையும் படிங்க: பிரியாணி சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு? - கடையை மூடிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.