தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதுவகை ஒமைக்ரான் தொற்று போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிவேகமாக பரவிவருகிறது. ஒரே வாரத்தில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
இப்படிபட்ட சூழலில், தென் ஆப்பிரிக்காவில் குழந்தைகளிடையே ஒமிக்ரான் தொற்று அதிகளவில் பரவிவருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக சிறார்களுக்கு இந்தத் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இதனால் உலக நாடுகள் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், சீனா, சிலி, கியூபா உள்ளிட்ட நாடுகளில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்தியாவில் இதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. முன்னதாக இரண்டு முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்த நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் செய்யும் சீரம் நிறுவனம் மூன்று வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாகவும், அடுத்த ஆறு மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகிவிடும் எனவும் கூறியுள்ளார். எனவே சிறார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் உலகம் உள்ளது.
இதையும் படிங்க: ஆறு மாதத்தில் குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி - அதர் பூனாவாலா