ETV Bharat / bharat

பாலிவுட் ஜோடியான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர்: சமீபத்திய புகைப்படம் வைரல் - மும்பை

பிரபல பாலிவுட் ஜோடியான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் தங்கள் மகள் ரஹாவுடன் குடும்ப விடுமுறைக்காக செல்லும்போது மும்பை விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Ranbir Kapoor spotted in new look with wife Alia Bhatt and daughter Raha at Mumbai airport
பாலிவுட் ஜோடியான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் :சமீபத்திய புகைப்படம் வைரல்
author img

By

Published : Jun 22, 2023, 3:06 PM IST

மும்பை: உலகளவில் பல கோடி ரசிகர்களைக் கொண்ட பாலிவுட்டின் பிரபலமான முகங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பல வருடங்களாக காதலித்து வந்தபின் , பிரம்மாஸ்திரா படத்திற்குப் பிறகு தங்களுக்குள்ளான காதலை வெளிப்படுத்தினர். இருவருக்கும் சுமார் 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் உண்டு. இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு ஏப்ரலில் திருமணம் செய்துகொண்ட இருவருக்கும், அதே ஆண்டு நவம்பர் 6 அன்று ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அக்குழந்தைக்கு ரன்பீரின் அம்மாவும், பழம்பெரும் பாலிவுட் நடிகையுமான நீது கபூர் தேர்வு செய்த ரஹா என்ற பெயரை சூட்டினர். இந்நிலையில் பாலிவுட்டின் பிரபலங்களான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் மும்பை விமான நிலையத்தில் தங்கள் மகளான ரஹாவுடன் விடுமுறைக்கு புறப்படும் புகைப்படம் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரு நடிகர்களும் தங்கள் குழந்தையான ரஹாவுடன் நேரத்தைச் செலவிடுவதற்கான தங்களின் திரைப்படப் பணியை முடித்துவிட்டு, குழந்தைவுடன் நேரத்தைச் செலவிட முடிவு செய்துள்ளனர். ஆலியா தற்போது தனது தாய்மையின் ஒவ்வொரு தருணத்தையும் ரஹாவுடன் அனுபவிக்கத் திட்டமிட்டுள்ளார்.

அனிமல் படம் முடிந்ததைத் தொடர்ந்து ரன்பீர் புத்தம் புதிய தோற்றத்தில் காணப்பட்டார். இதற்கிடையில், ஆலியா பிரேசிலுக்கு பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸின் டுடும் நிகழ்வில் கலந்து கொண்டார். மேலும், அவர் தனது ஹாலிவுட் அறிமுகப் படமான “ஹார்ட் ஆஃப் ஸ்டோனின்” டிரெய்லரை வெளியிட்டார். கரண் ஜோஹர் இயக்கியுள்ள இப்படத்தில், தர்மேந்திரா, ஷபானா ஆஸ்மி, ஜெயா பச்சன் ஆகியோரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் ஆலியா தற்போது ரன்வீர் சிங்குடன் ”ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி” படத்தில் நடிக்கத் தயாராகி வருகின்றார். மறுபுறம் ரன்பீர், சந்தீப் ரெட்டி வாங்காவின் அனிமல் படப்பிடிப்பை முடித்துவிட்டார். இதன் ப்ரீ-டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

மும்பை விமான நிலையத்தில் புகைப்படம் எடுக்கும்போது அவர்களின் மகள் ரஹாவும் உடனிருந்தார். ஆனால் ரஹாவை புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்குமாறு ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா ஆகியோர் கேட்டுக்கொண்டனர். இந்த காதல் ஜோடியின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானநிலையில், அவர்களின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க:உடலில் பச்சை குத்தி லியோவின் ஃபர்ஸ்ட் லுக் கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.