ETV Bharat / bharat

உத்தரகாண்ட் தேர்தல் - குற்ற வழக்குகளில் தொடர்புடைய வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - உத்தரகாண்ட் தேர்தல் வேட்பாளர்கள்

உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 626 பேர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

உத்தரகாண்ட் தேர்தல்
உத்தரகாண்ட் தேர்தல்
author img

By

Published : Feb 8, 2022, 5:56 PM IST

டேராடூன்: உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சில நாள்களில் நடைபெறவுள்ளது. ஆனால், கறைபடிந்த வேட்பாளர்களுக்கு இடம் கொடுப்பதில் எந்த கட்சியும் தயங்கவில்லை என்பதை வேட்பாளர் தேர்வு வெளிப்படுத்துகிறது.

தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் உத்தரகாண்ட் தேர்தல் கண்காணிப்பு ஆகியவை 632 வேட்பாளர்களில் 626 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தனர்.

பின்னர், வேட்பாளர்களில் 40 விழுக்காடு பேர் கோடீஸ்வரர்கள் என்று கூறியுள்ளனர். 252 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ஒரு கோடிக்கும் மேல் உள்ளது எனத் தெரியவந்தது.

கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள்:

ADR அறிக்கையின்படி, 626 வேட்பாளர்களில், 107 (17%) வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளை அறிவித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில், 637 வேட்பாளர்களில் 91 (14%) பேர் தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக அறிவித்திருந்தனர்.

தீவிர குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள்:

61 பேர் (10%) தங்களுக்கு எதிராக கடுமையான குற்ற வழக்குகளை அறிவித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில், 54 (8%) வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக அறிவித்தனர்.

குற்ற வழக்குகளில் கட்சி வாரியாக வேட்பாளர்கள்:

ADR-இன் படி, காங்கிரஸின் 70 வேட்பாளர்களில் 23 பேர் (33%), பாஜகவின் 70 வேட்பாளர்களில் 13 (19%), ஆம் ஆத்மி கட்சியின் 69 வேட்பாளர்களில் 15 (22%), 54 பேரில் 10 (19%) பேர் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் UKD(Uttarakhand Kranti Dal)-யின் 42 வேட்பாளர்களில் 7 (17%) பேர் தங்கள் வாக்குமூலத்தில் தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகளை அறிவித்துள்ளனர்.

கடுமையான குற்ற வழக்குகள் உள்ள கட்சி வாரியான வேட்பாளர்கள்:

காங்கிரஸின் 70 வேட்பாளர்களில் 11 பேர் (16%), பாஜகவின் 70 வேட்பாளர்களில் 8 பேர் (11%), 69 வேட்பாளர்களில் 9 பேர் (13%), ஆம் ஆத்மி 13% விழுக்காடு பேர், 54 வேட்பாளர்களில் 6 (11%) பேர் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் மற்றும் 42 உத்ரகாண்ட் கிராந்தி தள வேட்பாளர்களில் 4 (10%) பேர் தங்கள் பிரமாணப் பத்திரங்களில் தங்களுக்கு எதிராக கடுமையான குற்ற வழக்குகளை அறிவித்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கொண்ட வேட்பாளர்கள்:

6 வேட்பாளர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை அறிவித்துள்ளனர்.

6 வேட்பாளர்களில், 1 வேட்பாளர் ஒரே பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வு செய்ததது தொடர்பான வழக்கை பிரமாணப்பத்திரத்தில் அறிவித்துள்ளார்.

கொலை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ள வேட்பாளர்கள்:

ஒரு வேட்பாளர் தனக்கு எதிராக கொலை தொடர்பான வழக்கு (ஐபிசி பிரிவு-302) இருப்பதாக அறிவித்துள்ளார்.

கொலை முயற்சி தொடர்பான வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்கள்:

3 வேட்பாளர்கள் தங்கள் மீது கொலை முயற்சி (ஐபிசி பிரிவு-307) தொடர்பான வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

கோடீஸ்வர வேட்பாளர்கள்:

626 வேட்பாளர்களில் 252 பேர் (40%) கோடீஸ்வரர்கள். 2017ஆம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில், 637 வேட்பாளர்களில், 200 (31%) பேர் கோடீஸ்வரர்கள் என அறிவித்திருந்தனர்.

கட்சி வாரியான கோடீஸ்வரபதி வேட்பாளர்கள்:

70 பாஜக வேட்பாளர்களில் 60 பேர் (86%) கோடீஸ்வரர்கள். அதேபோல், 70 காங்கிரஸ் வேட்பாளர்களில் 56 (80%) பேர் கோடீஸ்வரர்கள். ஆம் ஆத்மி கட்சியில் உள்ள 69 வேட்பாளர்களில் 31 பேர் (45%) கோடீஸ்வரர்கள்.

பகுஜன் சமாஜ் கட்சியின் 54 வேட்பாளர்களில் 18 (33%) பேர் கோடீஸ்வரர்கள். அதே நேரத்தில், UKD-இல் உள்ள 42 வேட்பாளர்களில் 12 (29%) பேர் ரூ. 1 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

சராசரி சொத்துக்கள்:

உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் 2022ஆம் ஆண்டு போட்டியிட்ட ஒரு வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு 2.74 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் 637 வேட்பாளர்களுக்கு ஒரு வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு 1.57 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி வாரியாக சராசரி சொத்துக்கள்:

70 காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 6.93 கோடி ரூபாயாக உள்ளது. அதேபோல், பாஜகவில் ஒரு வேட்பாளரின் சராசரி சொத்து 6.56 கோடி ரூபாய், ஆம் ஆத்மி கட்சியில் ஒரு வேட்பாளரின் சராசரி சொத்து 2.95 கோடி ரூபாய், யுகேடி-யில் ஒரு வேட்பாளரின் சராசரி சொத்து 2.79 கோடி ரூபாய், அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சியில் ஒரு வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு 2.23 கோடி ரூபாயாக உள்ளது.

அதிக சொத்துக்கள் உள்ள வேட்பாளர்கள்:

ஹரித்வாரில் உள்ள லக்சர் சட்டப்பேரவைத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அந்திரிக்ஷ் சைனியின் சொத்து மதிப்பு 23 கோடியே 90 லட்சத்து 89 ஆயிரத்து 427 ரூபாயும், சௌபட்டகால் (பௌரி மாவட்டம்) பாஜக வேட்பாளர் சத்பால் மகராஜின் சொத்து மதிப்பு 87 கோடியே 34 லட்சத்து 13 ஆயிரத்து 319 ரூபாயாகவும் உள்ளது. உத்தரகாண்ட் கிராந்தி தளம் சார்பில் பவுரியின் ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியிடும் மோகன் கலாவின் சொத்து மதிப்பு 82 கோடியே 52 லட்சத்து 8 ஆயிரத்து 200 ரூபாயாக உள்ளது.

பூஜ்ஜிய சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளர்:

ராணிப்பூர் ஹரித்வார் மாவட்டத்திலிருந்து ஒரு சுயேச்சை வேட்பாளர் முகமது முர்ஸ்லீன் குரேஷி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர் தனது பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு பூஜ்ஜியம் என அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவைச் சீண்ட வேண்டாம்! - சீனா, பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.