நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
தன்னுடைய உடல்நிலை குறித்த அறிக்கையை ட்விட்டரில் பதிவிட்ட அவர், தன்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்துவிட்டு டெல்லியைவிட்டுப் புறப்படுவதற்கு முன்பு பரிசோதனை செய்துகொண்டார். அப்போது, கரோனா இருப்பது உறுதியானது.
இது குறித்து ராவத் ட்விட்டர் பக்கத்தில், "நான் நன்றாக உள்ளேன். எனக்கு எந்தவிதமான உடல்நலக்குறைவும் ஏற்படவில்லை. மருத்துவர்களின் ஆலோசனையின்படி, நான் தனிமைப்படுத்திக்கொண்டேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
அண்மையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை அவர் சந்தித்துப் பேசினார். அவருக்கும் கரோனா இருப்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.