டெல்லி: உத்தரகண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் பணிகள் இன்று நடைபெறுகின்றன.
இது குறித்து உத்தரகண்ட் மாநில பொறுப்பாளர் துஷ்யந்த் கௌதம் கூறுகையில், “சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பார்கள்” என்றார்.
இதற்கான கூட்டம் கட்சி தலைமையகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர்.
திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான அமைச்சரவை நான்கு ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில் அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பேபி ராணி மௌரியாவிடம் ஒப்படைத்தார்.
அப்போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பாற்ற நான்கு ஆண்டுகள் வாய்ப்பளித்த பாஜகவுக்கு நன்றிகள்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: உத்தரகண்ட் அரசை டிஸ்மிஸ் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்!