ஹரித்வார் : நாட்டுக்கு 2014ஆம் ஆண்டுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், அவரின் கருத்துக்கு உத்தரகாண்ட் பாஜக மேலிட பொறுப்பாளர் துஷ்யந்த் கௌதம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து துஷ்யந்த் கௌதம், “கங்கனா ரணாவத் அறிக்கையில் தெளிவான விளக்கம் இல்லை. அவர் 1947, 2014 ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்து கூறியுள்ளார்.
1947ஆம் ஆண்டை காட்டிலும் 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் சிறப்பாக உள்ளது. இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுகின்றனர், முதியோர்கள் மதிக்கப்படுகின்றனர். சகோதரிகள், பெண் குழந்தைகள் பாதுகாக்கப்படுகின்றனர்” என்றார்.
எனினும் கங்கனா ரணாவத்தின் பிச்சை என்ற கருத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த துஷ்யந்த் கௌதம், “சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் போன்ற எண்ணற்ற வீர தீரர்களின் தியாகத்தால் சுதந்திரம் கிடைத்தது” என்றார்.
மேலும் நேரு காந்தி குடும்பம், சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் போன்றோர்களின் தியாகத்தை மறைத்துவிட்டது என்றும் கூறினார்.
இதையும் படிங்க : இந்திரா காந்தியான தலைவி!