உத்தரகாண்ட் மாநிலத்தில் கோடை வெம்மை காரணமாக ஏற்பட்ட காட்டு தீயினால் வனவளம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 62 ஹெக்டர் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 பேர் உயிரிழந்துள்ளனர். 7 வன விலங்குகள் தப்பிக்க வழியின்றி தீயில் கருகி உயிரிழந்துள்ளன.
இந்தக் காட்டு தீயை அணைக்க மாநில வனத்துறையின் 12 ஆயிரம் காவலர்களும், தீயணைப்பு கண்காணிப்பாளர்களும் சம்பவ இடத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக பேசிய முதன்மை தலைமை பாதுகாவலர்,’இதுவரை 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமைந்துள்ளன’என்றார்.
இதையும் படிங்க:சுக்மா நக்சல் தாக்குதல்: 22 ராணுவ வீரர்கள் வீர மரணம்!