ETV Bharat / bharat

"ஜெய் ஸ்ரீராம்" அடிக் அகமது கொலையில் கைதான இளைஞரின் வாக்குமூலம் - வழக்கை திசைத் திருப்ப திட்டமா?

போதைக்கு அடிமையான மற்றும் வேலையில்லா இளைஞர்களை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரப் மீதான துப்பாக்கிச் சூடு அரங்கேற்றப்பட்டு இருப்பதாகவும் இதற்கான உள்நோக்கம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறினர்.

UP
UP
author img

By

Published : Apr 16, 2023, 1:11 PM IST

லக்னோ : பிரபல ரவுடியும் அரசியல்வாதியுமான அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரப் ஆகியோரை போலீசார் முன்னிலையில் 3 பேர் நடுரோட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பத்திரிகையாளர்கள் போல் நாடகமாடி 3 இளைஞர்களும் அடிக் அகமதுவை நெருங்கி துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய மறுகணமே மூன்று வானோக்கி கைகளை உயர்த்தி சரணடைவதாக போலீசாரிடம் தெரிவித்தனர். மூன்று பேரையும் மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். மூன்று பேரிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை, கேமிரா உள்ளிட்ட அனைத்தும் போலி என கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் கூறினர்.

பிரபல தாதா அடிக் அகமது மற்றும் அஸ்ரப் ஆகியோர் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் குறித்த அடையாளங்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர். பிடிபட்டவர்கள் லவ்லேஷ் திவாரி, சன்னி சிங், அருன் மவுரியா என அடையாளம் காணப்பட்டு உள்ளதாக போலீசார் கூறினர்.

இதில் லவ்லேஷ் போதை பொருளுக்கு அடிமையானவர் என போலீசார் கூறினர். லவ்லேஷின் தந்தையின் கூறுகையில், லவ்லேஷ் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றரர். லவ்லேஷ் போதை பொருளுக்கு அடிமையானதாகவும் அவனுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினர்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு முறை லவ்லேஷ் வீட்டிற்கு வந்ததாகவும், குற்ற வழக்கு ஒன்றில் அவனுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அதே போல் மற்றொரு இளைஞர் சன்னி சிங்கின் சகோதரர் பிந்து சிங் கூறுகையில், தனது சகோதரர் சன்னி இருவரை சுட்டுக் கொன்றது குறித்து தனக்கு தெரியாது என்றார். மேலும் சன்னி வேலையில்லாமல் ஊர் சுற்றித் திரிந்து கொண்டு இருந்ததாகவும் இப்படி ஒரு காரியத்தில் ஈடுபடுவார் என தனக்கு தெரியாது என்றார்.

மகனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்காதது குறித்து மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட அடிக் அகமது மற்றும் அஸ்ரப் ஆகியோரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தனர். அதற்கு அடிக் அகமது பதிலளிக்க முயன்ற நிலையில் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென அடிக் அகமதுவின் தலையில் துப்பாக்கியால் சுட்டார்.

இதில் அடிக் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து அஸ்ரப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சராமரியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவரும் உயிரிழந்ததாக போலீசார் கூறினர். துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்கள் "ஜெய் ஸ்ரீராம்" எனக் கூறியவாறு போலீசாரிடம் சரணடைந்தனர். வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் அடிக் அகமதுவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போதே தன்னை கொல்ல சதிச் செயல் நடப்பதாகவும், தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அடிக் அகமது நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். ஆனால் அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்நிலையில், அடிக் அகமது போதைக்கு அடிமையான மற்றும் வேலையில்லா இளைஞர்களை கொண்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.

இதையும் படிங்க : Uttar Pradesh: அடிக் அகமது சுட்டுக் கொலை - உ.பி.யில் 144 தடை உத்தரவு அமல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.