ETV Bharat / bharat

"இந்திய நீதிமன்றங்களில் ராகுல் காந்தி வழக்கை உன்னிப்பாக கவனிக்கிறோம்" - அமெரிக்கா அதிரடி! - ராகுல் காந்தி மோடி அவதூறு வழக்கு

சட்டத்தின் மீதான மரியாதை மற்றும் சுதந்திரத் தன்மையுடன் நீதித் துறை செயல்பட வைப்பது ஜனநாயகத்தின் மூலக்கல் என அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 28, 2023, 9:39 AM IST

Updated : Mar 28, 2023, 9:48 AM IST

வாஷிங்டான்: பிரதமர் மோடி அவதூறு கருத்து குறித்த ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தி தொடபாளர் வேதாந்த் படேல் தெரிவித்து உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடாக மாநிலம் கோலாரில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார்.

“நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்? எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற இணை பெயரோடு இருக்க முடியும்?” என ராகுல் காந்தி பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, மோடி குடும்பத்தாரின் சமூக மரியாதை மற்றும் பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என சூரத் நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய ஏதுவாக ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், தீர்ப்பை நிறுத்தி வைத்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள் காட்டி, ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டது. மேலும் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் "சங்கல்ப் சத்தியாகிரக" போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்து உள்ளார். செய்தியாளர்களை சந்தித்த வேதாந்த் படேல், "சட்டத்தின் மீதான மரியாதை மற்றும் சுதந்திரத் தன்மையுடன் நீதித் துறை செயல்பட வைப்பது ஜனநாயகத்தின் மூலக்கல் என்றார்.

மேலும் இந்திய நீதிமன்றங்களில் உள்ள ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், கருத்து சுதந்திரம், ஜனநாயக மதிப்புகள் மற்றும் கொள்கைகளை பாதுகாப்பதில் மனித உரிமைகள் பேணப்படுவது குறித்து இந்தியாவுடன் பலதர தரப்பட்ட கருத்துகளை தொடர்ந்து வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவுடனான ஈடுபாடுகளில், ஜனநாயக கொள்கை மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு, கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் குறித்த முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து முன்னிலைப்படுத்தி இரு நாடுகளின் ஜனநாயகத்தை வலுப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். இருதரப்பு உறவுகளைக் கொண்ட எந்த நாட்டிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் அமெரிக்கா ஈடுபடுவது இயல்பானது மற்றும் நிலையானது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: Cheetah Sasha Dies: நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலி உயிரிழப்பு - என்ன காரணம் தெரியுமா?

Last Updated : Mar 28, 2023, 9:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.