ETV Bharat / bharat

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆட்டோவில் பயணம் - ஆன்டனி பிளிங்கென் ஆட்டோவில் பயணம்

ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் ஆட்டோவில் பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

டெல்லியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆட்டோவில் பயணம்

author img

By

Published : Mar 4, 2023, 3:15 PM IST

டெல்லி: இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை கொண்ட அமைப்பு ஜி20. இக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் தலைமைப் பதவியை ஏற்கும். கடந்த ஆண்டு இந்தோனேசியாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு ஜி20 அமைப்புக்கான தலைமை பதவி, இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில், ஜி20 மாநாடு நடைபெறுகிறது.

இதற்கான முன்னதாக பல்வேறு குழு கூட்டங்கள் நடந்து வருகின்றன. நாடு முழுவதும் ஜி20 மாநாடு தொடர்பாக 200 கூட்டங்களை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக மார்ச் 1 மற்றும் 2ஆம் தேதிகளில், ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அதில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் வாவ்ரோவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, "உலகின் பல பகுதிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. நிதி நெருக்கடி, காலநிலை மாற்றம், போர், பெருந்தொற்று பாதிப்பு உள்ளிட்டவை சர்வதேச ஆட்சிமுறை தோல்வியடைந்து விட்டதை தெளிவாக காட்டுகிறது. நீடித்த வளர்ச்சியின் இலக்குகளை எட்டுவதில் நாம் பின்னோக்கி செல்லும் அபாயத்தில் உள்ளோம். பல வளரும் நாடுகள் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய கடன்களில் போராடுகின்றன.

முடிந்த வரையில் நம்மால் ஒன்றிணைந்து தீர்க்க முடியாத பிரச்னைகள் உருவாவதை அனுமதிக்கக் கூடாது. உலகிற்கு தலைமை வகிக்க முயலும் எந்த ஒரு குழுவும், பாதிக்கப்படுகிறவர்களின் கருத்துக்களை கேட்காதபோது, அக்குழுவால் உலகளாவியத் தலைமைக்கு உரிமை கோர முடியாது. வளர்ச்சி, பொருளாதார பின்னடைவு, ஊழல், பயங்கரவாதம் ஆகிய சவால்களை எளிதாக்க ஜி20 நாடுகளை உலகம் எதிர்நோக்குகிறது" என கூறினார்.

இந்நிலையில் ஜி20 மாநாடு, குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற பின், இந்தியாவில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கென் சந்தித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் ஆட்டோவில் பயணம் செய்தார். அமெரிக்க தூதரக ஏற்பாட்டின் பேரில் வாடகைக்கு ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆட்டோவில் பிளிங்கென் உற்சாகமாக பயணம் செய்த காட்சிகளை, அமெரிக்க தூதரகம் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஆன்டனி பிளிங்கென், "சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் எங்கள் நாட்டு மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களது கடின உழைப்பு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தி வருவதால் அதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி பெண்ணுக்கு பாலியல் தொல்லை; சாகும்வரை ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.