ரிச்மண்ட் (அமெரிக்கா): உலக நாடுகளின் முன்னிலையில் ரசாயன ஆயுத கையிருப்புகளின் சகாப்தத்தை அமெரிக்கா முன்னெடுத்து, அதனை அழித்து நிறைவேற்றியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை, “முதலாம் உலக போருக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட போர்களிலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ரசாயன ஆயுதங்களின் அத்தியாயத்தை இன்று புளூ கிராஸ் ஆர்மி டிப்போட் தொழிலாளர்கள் பல ஆண்டு முயற்சிக்குப் பின்னர் முழுமையான முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். கென்டக்கியில் 30,000 டன்களுக்கும் அதிகமாக கணக்கிடப்பட்ட GB நரம்பு முகவர் நிரப்பப்பட்ட ராக்கெட்டுகளை அழித்ததன் மூலம், உலகை அச்சுறுத்தும் ரசாயன போர் கருவிகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான நோக்கத்தை அமெரிக்கா உறுதிசெய்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ரசாயன ஆயுதங்களை அழிக்க அமெரிக்கா 30 வருடங்களாக போராடி வந்ததாகவும், இன்று அது முழுமையாக அழிக்கப்பட்டதற்கு அமெரிக்கா தன் அயராத உழைப்பை கொடுத்துள்ளது என்றும் ரசாயன இல்லாத உலகுக்கு வழிவகுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த தீர்க்கமான செயல் அனைத்து நாடுகள் மத்தியில் மதிப்பை வலுப்படுத்தி உள்ளதுடன் பெருமைபடவும் செய்துள்ளது” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆயுதங்கள் அமெரிக்காவின் முக்கிய நீர்நிலைகளான ரிச்மண்ட், கெண்டக்கி மற்றும் கொலராடோவின் பியூப்லோ ஆகிய நீர்நிலைகளில் முழுமையாக தகர்க்கப்பட்டது. உலகளவில் இந்த செயல் முன்மாதிரியான போக்கை கொடுக்கும் என்றும் அதிகாரிகள் மத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்களை அழிப்பதற்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இதனை முற்றிலும் தகர்த்தி ஆயுதமற்ற உலகை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
கடந்த 2016 ஆம் ஆண்டு தெற்கு கொலராடோ பிராந்தியத்தில் ரசாயன ஆயுத தகர்ப்பில் ஈடுபட்டு வந்த பியூப்லோ இரசாயன கிடங்கு தொழிலாளர்கள், கடந்த மாதம் ஜூன் 22 ஆம் தேதி தகர்ப்பு பணியை நிறைவு செய்துள்ளனர். இந்த ராணுவ நடவடிக்கையின் போது உயிர்களுக்கு கடும் தீங்கு விளைவிக்கும் முஸ்டார்ட் பிலிஸ்டர் ஏஜென்ட் ரசாயன ஆயுதம் 2600 டன்களும், ஒரிஜினல் வெப்பன் ஸ்டோக்ப்பிலேஸ் 30,000 டன் அளவில் கிடங்கில் இருப்பில் இருந்த ஆயுதங்கள் அனைத்தும் தகர்த்தப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த ஆயுதங்களை தகர்க்கும் நோக்கில், 800,000 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசாயன ஆயுதங்கள் 1950 ஆம் ஆண்டிலிருந்து சேகரிக்கப்பட்டு நாட்டு மக்களுக்கு தீங்கு இழைக்காத வகையில் தகர்க்கப்படும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கையின் படி, நாட்டில் ஒட்டுமொத்த ஆயுதங்களில் 8.5 சதவீதம் தகர்ப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, நேட்டோ அமைப்பு இதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிர்களுக்கு கடும் ஆபத்து விளைவிக்க கூடிய வெடி மருந்துகளாக கருதப்படும் 51,000 M55 வகை ராக்கெட்டுகள் சேமிக்கப்பட்டன. 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ரசாயன ஆயுத மாநாட்டின் கீழ் இதற்கான பயன்பாட்டு தடையை நிறைவு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதனை மீறி இந்த ஆயுதங்கள் நவீன போரில் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவான் கூறுகையில், காற்றில் திறக்கப்படும் மற்றும் வெளியிடும் குண்டுகள் மீது அதிகளவு கவனம் கொண்டு பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இதனையும் விரைவில் தகர்க்கப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும் இந்த நவீன போரில் குறைந்தது 100000 க்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக இந்த ரசாயன ஆயுதங்களின் தகர்ப்புகள் 2019 ஆம் ஆண்டு கெண்டக்கி மாகாணத்தில் சேமிக்கப்பட்டு பசிபிக் பெருங்கடலிலும், பாலைவனங்களிலும், மக்களுக்கு தீங்கு இழைக்காதவாறு ராணுவ அதிகாரிகளால் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆயுதங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டதை இந்த நேரத்தில், கெண்டக்கி மேயர் லூயிஸ் வில்லே மற்றும் பியூப்லோ மேயர் நிக் கிரேடிசர் நினைவுகூர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்திய துணை தூதரகம் தாக்குதல் - குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை!