ETV Bharat / bharat

காலநிலை மாற்றத்திற்கான அமெரிக்க தூதர் ஜான் கெர்ரி இன்று இந்தியா வருகை! - ஜான் கெர்ரி இந்திய பயணம்

காலநிலை மாற்றத்திற்கான அமெரிக்க தூதர் ஜான் கெர்ரி ஐந்து நாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்த பயணத்தில் டெல்லி மற்றும் சென்னையில் காலநிலை தொடர்பாக அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தவுள்ளார்.

US climate
காலநிலை தூதர்
author img

By

Published : Jul 25, 2023, 12:08 PM IST

வாஷிங்டன்: காலநிலை மாற்றத்திற்கான அமெரிக்க தூதர் ஜான் கெர்ரி, கடந்த வாரம் சீனா சென்றிருந்தார். கடந்த 16ஆம் தேதி பெய்ஜிங் நகருக்கு சென்ற கெர்ரி, சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீனாவின் மூத்த காலநிலை தூதர் ஜீ சென்ஹூவா உள்ளிட்ட பலருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், மீத்தேன் உமிழ்வைக் குறைத்தல், நிலக்கரிக்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துதல், காடுகள் அழிப்பை தடுத்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், இந்த சந்திப்பில் ஒப்பந்தங்கள் ஏதும் கையெழுத்தாகவில்லை.

இந்த நிலையில், சீனப் பயணத்தை முடித்துக் கொண்ட ஜான் கெர்ரி, ஐந்து நாட்கள் பயணமாக இன்று(ஜூலை 25) இந்தியா வருகிறார். இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரையிலான இந்த பயணத்தில், கெர்ரி, டெல்லி மற்றும் சென்னைக்கு சென்று அரசு அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். கெர்ரியின் இந்த பயணத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மற்றும் சேமிப்பு தொடர்பான திட்டங்களில் முதலீடு செய்வதை ஊக்குவித்தல், கார்பன் உமிழ்வு இல்லாத பேருந்துகள் பயன்பாட்டை ஊக்குவித்தல், எரிசக்தி விநியோக சங்கிலிகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட காலநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு நோக்கங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

சென்னையில் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை தொடர்பான அமைச்சர்கள் கூட்டத்திலும் ஜான் கெர்ரி பங்கேற்க உள்ளார்.

முன்னதாக கடந்த 22ஆம் தேதி, ஜி20 நாடுகளின் எரிசக்தி துறை அமைச்சர்கள் கூட்டம் கோவாவில் நடைபெற்றது. இதில் ஜி20 நாடுகளின் எரிசக்தி துறை அமைச்சர்கள் மற்றும் பிற வெளிநாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "எதிர்காலம், நிலைத்தன்மை அல்லது வளர்ச்சி, மேம்பாடு போன்ற எந்தப் பேச்சும், ஆற்றல் மூலம் இல்லாமல் முழுமை அடையாது. சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்று மின்சாரம் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வலுவாக செயல்படுத்தி வருகிறது. மரபு சாரா மின்சக்தி திறன் இலக்கை இந்தியா 9 ஆண்டுகளுக்கு முன்பாகவே அடைந்துவிட்டது. தற்போது 2030ஆம் ஆண்டுக்குள், மரபு சாரா எரிசக்தி திறனை 50 சதவீதமாக அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளோம். அதேபோல், கார்பன் வெளியேற்றம் இல்லாத நாடாக மாற வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா செயல்பட்டு வருகிறது" என்றார்

இதையும் படிங்க: சென்னையில் ஜி20 பேரிடர் பணிக்குழு கூட்டம் - பருவநிலை சுற்றுச்சூழல் குறித்து ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.