“டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் நெருக்கடி தொடர்கிறது. டெல்லிக்கு அவசரமாக ஆக்சிஜனை வழங்குமாறு நான் மீண்டும் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். சில மருத்துவமனைகளில் சில மணிநேரத்திற்கு மட்டுமே ஆக்சிஜன் உள்ளது” என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். “டெல்லிக்கு அவசரமாக ஆக்சிஜனை வழங்குமாறு மடிந்த கைகளால் மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, நிலைமையைக் கையாள்வதில் மத்திய அரசு அதிக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அதன் மூலம் ஆக்சிஜன் வழங்கல் தொடர்பாக மாநிலங்களில் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
அனைத்து மருத்துவமனைகளிலிருந்தும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து அவசரநிலை அழைப்புகளைப் பெற்றுவருவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: காங். எம்பி ராகுலுக்கு கரோனா!