உத்தரப்பிரதேசம்: ஷாம்லி மாவட்டத்தில் உள்ள 12 கிராமங்களில் மின் இணைப்பு கூட வழங்காமல், மின்துறை அலுவலர்கள் 1000 ரூபாய் பில் வசூலிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த 12 கிராமங்களில் வசிக்கும் மக்கள் இலவச மின் இணைப்பு என்ற பெயரில் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல், தங்கள் வீடுகளில் மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இந்த கிராம மக்களுக்கு மின்சாரம் என்பது தொலை தூரக்கனவாக இருந்து வரும் நிலையில், மின்வாரிய ஊழியர்கள் 1000 ரூபாய்க்கான மின்கட்டணத்தை அப்பகுதி மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இதுகுறித்து கோகாசா கிராமத்தைச்சேர்ந்த சரோஜ் தேவி என்ற பெண் கூறியதாவது, ’தங்களின் கூட்டுக் குடும்பத்தில் மின் துறையினர் நான்கு மீட்டர்கள் பொருத்தியுள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன், மின் மீட்டர்கள் பொருத்தும் போது, இலவச மின்சாரம் வழங்கப்படும் எனக்கூறினர்.
ஆனால், சமீபகாலமாக மின்வாரிய ஊழியர்கள் தங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து, ஒவ்வொரு மீட்டருக்கும் 50,000 ரூபாய் டெபாசிட் செய்யுமாறு வலியுறுத்துகின்றனர்’ என்றார்.
கோக்ஸா கிராமத்தைச்சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பகத் ராம் கூறுகையில், யாரும் இல்லாத வீட்டிற்கு மின்துறை ரூ.50,000 மின்கட்டண ரசீது வழங்கியதாக கூறினார்.
இந்த விவகாரம் குறித்து பாசிமாஞ்சல் வித்யுத் வித்ரன் நிகம் லிமிடெட் மேற்பார்வை பொறியாளர் ராம் குமாரிடம் கேட்டபோது, இந்த விஷயத்தை விசாரிக்க குழு ஒன்றை அனுப்புவோம் என்றும், கிராம மக்களின் கவலைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்துக் கடவுள்களை நம்பமாட்டோம்... புத்த மதத்திற்கு மாறிய 11 தம்பதிகள்...