ETV Bharat / bharat

உத்தரப் பிரதேச தேர்தல்: முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று(பிப். 23) நடைபெறுகிறது.

UP polls
UP polls
author img

By

Published : Feb 23, 2022, 8:06 AM IST

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே, மூன்று கட்டங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இன்று 59 தொகுதிகளுக்கு நான்காம் கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இன்றைய வாக்குப்பதிவில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளைக் கொண்ட பிலிபித், உன்னாவ், லக்கிம்பூர் கேரி, ரேபரேலி, சீதாபூர், பந்தா, பதேபூர், ஹர்தோய், லக்னோ உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

லக்னோ கண்டோன்மென்ட் தொகுதியில் மாநில சட்டத்துறை அமைச்சர் பிரஜேஷ் பதக், ரேபரேலி தொகுதியில் அதிதி சிங், சரோஜினி நகர் தொகுதியில் அமலாக்கத்துறை முன்னாள் இயக்குனர் ராஜேஷ்வர் சிங் ஆகியோர் பாஜக சர்பில் களமிறங்குகின்றனர்.

உன்னாவ் தொகுதியில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் தாயார் ஆஷா சிங் காங்கிரஸ் சார்பில் களமிறங்குகிறார். அதேபோல் வேளாண் போராட்ட வன்முறை சம்பவம் நடைபெற்ற லக்கிம்பூர் கேரி தொகுதியில் பாஜக வேட்பாளர் யோகேஷ் வர்மா மீண்டும் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏழு கட்ட தேர்தல் மார்ச் 10ஆம் தேதி நிறைவடையும் நிலையில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 13ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் வெளியாகவுள்ளன.

இதையும் படிங்க: பிப்ரவரி 23: இன்றைய ராசிபலன் - உங்க ராசி எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.