ETV Bharat / bharat

UP Polls 2022: உத்தரப் பிரதேச வேட்பாளர்களின் குற்றப் பின்னணி! - UP Assembly Election 2022

உத்தரப் பிரதேசத்தில் ஆளும், ஆண்ட, ஆளத் துடிக்கும் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுகளை அடுக்கிவரும் நிலையில் மாநிலத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து பார்க்கலாம்.

UP
UP
author img

By

Published : Jan 27, 2022, 9:07 PM IST

லக்னோ : குண்டர்களை பாஜக பாதுகாக்கிறது என சமாஜ்வாதியும், ஜெயிலில் இருந்து பெயிலில் வருவோருக்கு சீட் கொடுக்கிறது சமாஜ்வாதி எனப் பாஜகவும் ஒருவர் மீது ஒருவராக குற்றச்சாட்டை சுமத்திவருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்தப் பத்திரிகையாளர் விஜய் உபாத்யாயா, “உத்தரப் பிரதேசத்தில் முக்கிய கட்சிகள் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் பலரை களமிறக்கியுள்ளன. இவர்களிடம் இருந்து அரசியலை சுத்தப்படுத்த வழி ஒன்று உள்ளது.

அரசு தூய்மையான அரசியலை விரும்பினால், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் ஆகியோர் மீதான வழக்குகளில் விரைவு நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும். ஒன்று தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் அல்லது விசாரணை மூலம் விடுவிக்கப்பட வேண்டும். கிரிமினல் போக்கு உள்ளவர்களிடமிருந்து அரசியலை சுத்தப்படுத்துவதற்கான ஒரே வழி இதுதான்” என்றார்.

அந்த வகையில் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை கட்சி வாரியாக பார்க்கலாம்.

சமாஜ்வாதி கட்சி

ராகுல் யாதவ் (செகந்திராபாத்), ஜாபர் ஆலம் (அலிகார்), ஹரிஸ் குமார் (திபாய்), பன்ஷி சிங் (குர்ஜா), முகம்மது ஆதில் (மீரட் - தெற்கு), தேவேந்திர அகர்வால் (மதுரா), ஷா ஐசக் (கோயில்), நாகித் ஹாசன் (கெய்ரானா), பிரின்ஸ் (தாத்ரி), ஞானேந்திரா (ஆக்ரா- வடக்கு), விரேஸ் யாதவ் (அட்ராலி), ரஃபிக் அன்சாரி (மீரட்), சுனில் சௌத்ரி (நொய்டா), யோகேஷ் வர்மா (ஹஸ்தினாபூர்), அதுல் பிரதான் (சர்தானா), ஷாகித் மன்சூர் (கிதோர்), பங்கஜ் குமார் மாலிக் (சர்தாவால்) மற்றும் அமர்பால் (ஷாகிபாபாத்).

பாரதிய ஜனதா கட்சி

சுரேஷ் கன்னா (தன பவான்), உமேஷ் மாலிக் (புதானா), பகவான் சிங் குஷ்வாஹா (கெய்ரகார்க்), யேகேந்திர உபாத்யாய் (ஆக்ரா - தெற்கு), பிரதீப் குமார் சௌத்ரி (புலந்த்சாஹர்), விஜய்பால் (ஹபூர்), மிரிகங்கா சிங் (கெய்ரானா), கமல் தத் சர்மா (மீரட்), மணீந்தர் பால் (ஷிவால் காஸ்), நந்தி கிஷோர் (லோனி), பாபு லால் (ஃபதேபூர் சிக்ரி), தினேஷ் காதிக் (ஹஸ்தினாபூர்), சங்கீத் சோம் (சர்தானா), அனில் குமார் (சிகார்பூர்), சத்யதேவ் சிங் (கிதோர்), டாக்டர். தர்மபால் சிங் (எத்மாதூர்), பிரசாந்த் சௌத்ரி (மீராபூர்), விக்ரம் சிங் (காதவ்லி), அனில் பரசர் (கோயில்), அமித் அகர்வால் (மீரட் கண்டோன்மெண்ட்).

சமாஜ்வாதி கட்சி

ஷிகர்பூரைச் சேர்ந்த முகமது ரபீக், சார்தாவாலின் சல்மான் சயீத், ஹபூரைச் சேர்ந்த மணீஷ் சிங், எத்மத்பூரின் பிரபால் பிரதாப் சிங், மீரட் தெற்கின் தில்ஷாத் அலி, அனுப்ஷாஹரின் ராமேஷ்வர், சார்ராவின் திலக் ராஜ், புலந்த்ஷாரின் கல்லு குரேஷி, கத்தௌலியின் கர்தார் சிங் பதானா, அமித் சர்மா மீரட் கான்ட், ஹஸ்தினாபூரின் சஞ்சீவ் குமார், சயானாவின் சுனில் குமார், மதுராவின் சதீஷ் குமார் சர்மா, லோனியின் அகில், செகந்திராபாத்தைச் சேர்ந்த மன்வீர் சிங்.

7 கட்டங்களாக தேர்தல்

இதுபோன்ற குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் பெயர்கள் பெரும்பாலான கட்சிகளிலும் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில் இதுவரை அறிவிக்கப்பட்ட பட்டியலில் சமாஜ்வாதி வேட்பாளர்கள் 18 பேரும், பாஜக வேட்பாளர்கள் 20 பேரும், சமாஜ்வாதி வேட்பாளர்கள் 16 பேரும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் ஆவார்கள். எனினும் இவர்கள் இன்னமும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

மேலும் இவர்கள் வேட்புமனுத் தாக்கலில் சில சட்ட ரீதியாக பிரச்சினைகளும் உள்ளன. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்.7 முதல் மார்ச் 3ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதையும் படிங்க : UP polls 2022: உத்தரப் பிரதேச தேர்தல் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும்- அமித் ஷா!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.