லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம் கோட்வாலியில் எலியைக் கொடூரமாக கொலை மனோஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நவம்பர் 25ஆம் தேதி எலியின் வாலில் கையிறு கட்டி செங்களுடன் இணைத்து வாய்க்காலில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை கண்ட விலங்குகள் நல வாரியத்தின் கெளரவ விலங்கு நல அதிகாரி விக்கேந்திர சர்மா விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் மனோஜ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோட்வாலி போலீசாரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் கோட்வாலி போலீசார் எலியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு செய்ய கால்நடை மருத்துவ அலுவலரை அனுகினர். அதைத்தொடர்ந்து எலியின் உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதனிடையே விக்கேந்திர சர்மா மாவட்ட விலங்குகள் நல வாரியம் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் வலியுறுத்தினார். அதனடிப்படையில் நேற்று (நவம்பர் 27) மனோஜ் குமார் மீது பிரிவு 429 (விலங்கைக் கொல்வது அல்லது காயப்படுத்துதல்) கீழ் வழங்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உத்தரகாண்ட்டில் 3 பைக்குகள் மீது மோதிய லாரி