ETV Bharat / bharat

உ.பியில் பாலியல் வன்கொடுமையால் பாதித்த பெண்ணிடம் ஆபாச கேள்வி.. காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்! - இளபெண்ணிடம் ஆபாச கேள்வி

UP: உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வைரலாகிய நிலையில், சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 9:44 PM IST

சாம்பல் (உத்தரப்பிரதேசம்): கடந்த ஜூன் மாதம், தன்னை ஐந்து நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் உத்தரப்பிரதேசத்தில் போலீசில் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அப்பெண்ணிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர், இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் தகாத கேள்விகளை எழுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பான இரண்டு ஆடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் சாம்பல் பகுதியில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பித்த இளம்பெண்ணிடம் விசாரணையின்போது தகாத கேள்விகளை எழுப்பியதாக, சமூக வலைத்தளங்களில் வைரலாகிய 2 ஆடியோக்களின் அடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த குறிப்பிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பழகியதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாகவும் குற்றம் சாட்டிய அப்பெண்ணின் குடும்பத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகாரளித்தனர். இதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் அசோக் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, இவ்வழக்கு ஏஎஸ்பி தகுதியுடைய மற்றொரு அதிகாரியிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், விசாரணை அறிக்கை தயாரிப்பதற்காக இன்ஸ்பெக்டர் அசோக் குமார், இளம்பெண்ணிடம் பலமுறை ஆபாசமான கேள்விகளைக் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் மருத்துவப் பரிசோதனை பற்றிய பல முறையற்ற கேள்விகளை இன்ஸ்பெக்டர் கேட்டதாகவும், அதற்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை என்றும் அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதனிடையே இது தொடர்பான, 1 நிமிடம் 58 வினாடிகள் மற்றும் 1 நிமிடம் 10 வினாடிகள் கொண்ட இரண்டு ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

குற்றவாளிகளுக்கு உடந்தையாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவரின் பெயரை மட்டும் கூறுமாறு வற்புறுத்தியதாகவும், வாக்குமூலங்களை சரியாக பதிவு செய்யவில்லை என்பன உள்ளிட்ட பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இது குறித்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சாம்பல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குல்தீப் சிங் குணாவத், அசோக் குமாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ததோடு, இவ்வழக்கு விசாரணையை ஏஎஸ்பி ஸ்ரீஷ் சந்திராவிடம் ஒப்படைத்தார்.

வைரலாகும் ஆடியோவில் இளம்பெண்ணுக்கும், அசோக் குமாருக்கும் இடையேயான உரையாடல் தங்களது கவனத்திற்கு வந்ததாகவும், அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், இவ்வழக்கு தொடர்பாக குன்னூர் காவல் நிலையத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஏஎஸ்பி ஸ்ரீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ம,பி-யில் பாலியல் வன்புணர்வு; அரை நிர்வாண நிலையில் உதவி கோரிய சிறுமி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.