உத்தரப் பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் மொஹல்லா பகுதியைச் சேர்ந்தவர் மன்சூரி. 26 வயதாகும் இவரின் உயரம் 3 அடி, 2 அங்குலம் மட்டுமே. உயரத்தைக் காரணம் காட்டி, இவரின் திருமணம் பல முறை தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. பல பெண்களைப் பார்த்தும், அனைவரும் வேண்டாம் என ரிஜெக்ட் செய்ததால், மன உளைச்சலுக்கு ஆளான மன்சூரி காவல் நிலையத்தை நோக்கிப் புகாரளிக்க புறப்பட்டார். அங்கிருந்த பெண் காவல் ஆய்வாளரிடம் தனது பிரச்னையை எடுத்துக்கூறிய மன்சூரி, தனக்கான பெண்ணை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுள்ளார்.
மன்சூரி கதையைக் கேட்ட அவர், நிச்சயம் உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லையென்று, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்பட முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவரின் வேதனை குரல், பல இடத்தில் ஒலிக்கத் தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த பாலிவுட் நடிகர் சல்மான் கான், மும்பை புறப்பட்டு வாருங்கள், உங்களுடன் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார். திருமண ஆசையில் தவிக்கும் நபருக்கு, பொண்ணு தேட பாலிவுட் நடிகர் களமிறங்கியுள்ளது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இரண்டு யானைகள் துரத்தல்... ஜீப்பில் சுற்றுலாப் பயணிகள்... திக் திக் சவாரி!