ETV Bharat / bharat

அவ்வை சண்முகி, ரெமோவுக்கே டஃப் கொடுத்த ரியல் ஸ்டோரி: உ.பி.யில் ருசிகரம் - Valentine disguised as a woman in Uttar Pradesh

உத்தப் பிரதேசத்தில் ஆண் ஒருவர் அவ்வை சண்முகி, ரெமோ திரைப்பட கதைகளுக்கே டஃப் கொடுக்கும்விதமாக வேடம் அணிந்து காதலியைத் தேடிச் சென்றுள்ளார். பின்பு என்ன நடந்தது?

அவ்வை சண்முகி, ரெமோவின் டவ் கொடுத்த ரியல் ஸ்டோரி - உ.பி யில் ருசிகரம்

author img

By

Published : Jun 5, 2021, 10:09 AM IST

இளைஞர்கள் காதலுக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள். காதலியின் கரம்பிடிக்க எந்த ஒரு அவதாரத்தையும் எடுப்பார்கள். திரைப்படங்களில்கூட இப்படிக் கதைகள் கண்டு. ரெமோ திரைப்படத்தில் தன் காதலுக்காக சிவகார்த்திகேயன் செவிலி வேடம் அணிவார். அவ்வை சண்முகி திரைப்படத்தில் தன் காதல் மனைவிக்காக கமல் ஹாசன் மாமி வேடம் அணிந்து நடித்திருப்பார்.

திரைப்படங்களில் பார்த்து நம்மை ஈர்த்த அப்படியொரு சம்பவம்தான் உத்தரப் பிரதேசத்தில் நடந்தேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பாதோஹி பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமண வீட்டிற்குள் அழகான பெண் ஒருவர் நுழைத்திருக்கிறார். அவரின் குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும் பல ஆண்களின் பார்வையை அவர் பக்கம் திருப்பியது என்றே சொல்லலாம்.

லுக் விட்ட இளைஞர்
லுக்விட்ட இளைஞர்

அந்த அளவிற்கு மேக்கப் செய்து திருமண வீட்டிற்குள் அவர் உலா வந்தார். அவரின் உடை ஓகேவாக இருந்த பலருக்கு அவரின் நடை, பாவனையில் சந்தேகம் வந்தது. அவர் தலையில் அணிந்திருந்த முக்காடு கழன்றபோது அவரின் முடியும் கழன்றது.

பின்புதான் தெரிந்தது அது சவரியென்று. அவரிடம் விசாரிக்கையில் அவர் ஆண் குரலில் பேசியதும் அம்பலமானது. உறவினர்களிடம் வசமாகச் சிக்கிகொண்ட அவர் உடனே அங்கிருந்து தப்பியோடி வெளியே தயாராக இருந்த தனது நண்பரிடன் இருசக்கர வாகனத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

வசமாக சிக்கினார்
வசமாகச் சிக்கினார்

பின்புதான் அந்த நபர் மணப்பெண்ணின் காதலன் என்பதும் காதலியை அழைத்துச் செல்வதற்காக அந்த நபர் அப்படி ஒரு கேட்டப் போட்டு திருமண வீட்டிற்குள் நுழைந்ததும் தெரியவந்தது.

பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட தலை - தவிக்கும் குரங்கு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.