ETV Bharat / bharat

ஒரே மேடையில் 3 ஆயிரம் ஜோடிகளுக்கு டும்.. டும்.. டும்... - உத்தரபிரதேசம் மெகா திருமணம்

உத்தர பிரதேச மாநில அரசின் கன்யா திருமண உதவித் திட்டத்தில் ஒரே மேடையில் 3 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

மெகா திருமணம்
மெகா திருமணம்
author img

By

Published : Nov 25, 2022, 10:05 AM IST

காசியாபாத்: உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் மாநில அரசின் கன்யா திருமண உதவித் திட்டத்தில் ஒரே மேடையில் 3 ஆயிரம் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது.

மத்திய சாலை போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங், மற்றும் உத்தரபிரதேச மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அனில் ராஜ்பஹார் உள்ளிட்டோர் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினருக்கு உதவும் வகையில் மாநில அரசு கன்யா திருமண உதவித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. காசியாபாத்தில் அமைக்கப்பட்ட மெகா திருமண மேடையில், ஏறத்தாழ 3 ஆயிரம் பேர் தங்கள் இணையை கரம் பிடித்தனர்.

ஒரே மேடையில் 3 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம்

இந்து சமயத்தை சேர்ந்த ஆயிரத்து 850 ஜோடிகள், ஆயிரத்து 147 இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஜோடிகள், புத்தம் மற்றும் சீக்கிய மதங்களை சேர்ந்த ஜோடிகள் உள்பட பல்வேறு சமூக சமயங்களை சேர்ந்த ஜோடிகள் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டனர்.

காசியாபாத், புலாந்சாகர், ஹபூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணத்தில் அதிகளவில் கலந்து கொண்டனர். உறவினர்கள் மேளம் அடித்து ஆட்டம் பாட்டத்துடன் திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமண ஜோடிகளின் உறவினர்கள் கூட்டத்தால் மெகா திருமண விழா திருவிழா போல் காட்சி அளித்தது.

இதையும் படிங்க: 'தனி கொடி விவகாரத்தில் இந்திய அரசுடன் சமரசம் கிடையாது'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.