லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நேற்றிரவு (பிப். 6) நொய்டா-ஆக்ரா விரைவுச் சாலையில் காரின் அடியில் சிக்கிய ஒருவர் 11 கி.மீ. தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த கார் மாண்ட் என்னும் பகுதியில் உள்ள டோல் பிளாசாவில் நின்ற பிறகே சம்பவம் ஓட்டுநருக்கும், பிளாசா பணியாளர்களுக்கும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் மதுரை போலீசார் டெல்லியைச் சேர்ந்த வீரேந்தர் சிங் என்பவரை நள்ளிரவில் கைது செய்தனர். இதனிடையே காரின் அடியில் சிக்கிய நபரின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவரது அடையாளங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். போலீசார் முதல்கட்ட தகவலில், டெல்லியை சேர்ந்த காரின் உரிமையாளர் வீரேந்தர் சிங் தனது மனைவி உடன், ஆக்ராவிலிருந்து நொய்டா நோக்கி யமுனா விரைவுச் சாலை வழியாக சென்றுள்ளார்.
இதனிடையே, அவரது காரில் ஒருவர் சிக்கி இழுந்துச் செல்லப்பட்டுள்ளார். இப்படி ஒருவர் சிக்கியிருப்பதை அடர்ந்த பனிமூட்டம் காரணமாக கவனிக்க முடியவில்லை என்று வீரேந்தர் சிங் தெரிவித்துள்ளார். அதோடு டோல் பிளாசாவில் பணியார்கள் சொன்ன பின்பே அவருக்கு தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கார் பயணித்த நேரத்தில் 11 கி.மீ. இடைப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராக்களை கைப்பற்றி ஆய்வில் ஈடுபட்டுவருகிறோம். இந்த அடையாளம் தெரியாத நபர் காருக்கு அடியில் சிக்கிபின் உயிரிழந்தாரா அல்லது அதற்கு முன்பே உயிரிழந்து சாலையில் கிடந்தாரா என்பது குறித்து உடற்கூராய்வின் முடிவில் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நாடு முழுவதும் 'அதானி' பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் - ராகுல் காந்தி