கரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருக்கிறது. தினந்தோறும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். பல மாநிலங்களில் கரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில், உத்தரப் பிரதேசத்திலும் கரோனா பரவலை கட்டுப்படுத்த, பகுதி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவானது நாளையுடன் (மே 10) முடிவடையவுள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு (மே 17 வரை) பகுதி நேர ஊரடங்கை நீட்டித்து உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவானது, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று, நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 26,847 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 298 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 80 ஆயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது.