அயோத்தி: உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் உள்ள ராம் லல்லா கோயிலுக்குச் சென்று ஞாயிற்றுக்கிழமை (பிப்.7) பிரார்த்தனை செய்தார்.
அப்போது, கோயிலில் நடைபெறும் பஜன் சந்த்யா சீதல், ராணி நினைவு பூங்கா, ராம கதை பூங்கா, ராமக் கதை புகைப்பட நினைவகம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
இது குறித்து வெளியான அறிக்கையில், “அயோத்தி ராமர் கோயிலில் பல நகர சாலைகளை அகலப்படுத்துதல், பல நிலை பார்க்கிங் தளங்களை நிர்மாணித்தல் மற்றும் பஸ் மற்றும் ரயில் நிலையத்தை சீரமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்றுவருகின்றன என்று மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துவதோடு, அயோத்தியை சூரிய நகரமாக மாற்றும் திட்டமும் உள்ளது. கூடுதலாக புராணம் மற்றும் வரலாற்று தளங்களின் புனரமைப்பும் நடைபெற்றுவருகிறது.
அயோத்தி வளர்ச்சிக்கு உலகத் தரம் வாய்ந்த ஆலோசகரை நியமிக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் உரையில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்குப் பாராட்டு!