ETV Bharat / bharat

காற்றில் பறந்த தடை உத்தரவு, உ.பி.,யில் வரலாறு காணாத வகையில் உயர்ந்த காற்று மாசு! - காற்று தர மதிப்பீடு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த போதும், தீபாவளிக்கு பின் அம்மாநில தலைநகரில் காற்று மாசு 881ஆக அதிகரித்துள்ளது.

UP cities defy firecracker ban,
UP cities defy firecracker ban,
author img

By

Published : Nov 15, 2020, 7:12 PM IST

இந்தியாவின் பல முக்கிய நகரங்களும் கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுவருகின்றன. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அவை பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

கரோனா ஊரடங்கு காலத்தில் காற்று மாசு குறைந்திருந்த போதிலும், தளர்வுகளுக்கு பின் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கியதும் காற்று மாசு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தீபாவளியின்போது பட்டாசுகளை வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன்படி உத்தரப் பிரதேச மாநிலத்தில் 13 நகரங்களில் பட்டாசுகளை வெடிக்க அம்மாநில அரசு தடை விதித்திருந்தது. ஆனால், அரசின் இந்த தடை உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்கவில்லை. மாநிலம் முழுவதும் நேற்று (நவம்பர் 14) தீபாவளி பண்டிகையின் போது, பொதுமக்கள் வழக்கம் போல பட்டாசுகளை வெடித்தனர்.

இதனால் அம்மாநிலத்திலுள்ள பல்வேறு நகரங்களிலும் காற்று மாசு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று இரவு (நவ. 14) காற்று தர மதிப்பீடு 881ஆக இருந்தது. இன்று(நவ.15) காலை மாசு சற்று குறைந்து 427 ஆக உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ராஜாஜிபுரத்தில் இன்று காலை காற்று தர மதிப்பீடு 752ஆக இருந்தது.

பட்டாசு தடை குறித்து தொழிலதிபர் ராகேஷ் காத்ரி கூறுகையில், "நான் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை வெடித்துள்ளேன். அரசு பட்டாசுகளுக்கு தடை விதிப்பதற்கு முன்பே இவற்றை வாங்கிவிட்டேன். பட்டாசுகளை வீட்டில் வைத்திருப்பது ஆபத்தானது. எனவே, வேறு வழியின்றி பட்டாசுகளை வெடிக்க வேண்டியதாகிவிட்டது" என்றார்.

இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தீபாவளி கொண்டாடிய மருத்துவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.