ETV Bharat / bharat

உத்தர பிரதேசத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. பள்ளி ஆசிரியர் மீது வழக்கு! - ஆசிரியர் மீது மானபங்கம் துன்புறுத்தல் புகார்

UP Child Commission files case against school teacher for sexually harassing: உத்தரபிரதேசம் உன்னாவ் பகுதியிலுள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளிடம் வாக்கு மூலம் பெற்றுச் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

up-child-commission-files-case-against-school-teacher-for-sexually-harassing-18-minor-girls
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 7:14 PM IST

உன்னாவ் (உத்தரபிரதேசம்): உன்னாவ் பகுதியில் உள்ள பள்ளியில் பயிலும் 7 முதல் 12 வயது கொண்ட 18 சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அந்த பள்ளியின் ஆசிரியர் மீது உத்தரபிரதேச மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. நேற்று (நவ.25) குழந்தைகளிடம் வாக்கு மூலம் பெற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உன்னாவ் பகுதியிலுள்ள பள்ளி ஆசிரியர் ராஜேஷ் குமார் மீது பாலியல் புகார் எழுந்தது. இதனையடுத்து மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பிரீத்தி பரத்வாஜ் தலைமையிலான குழு இன்று சம்மந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உத்தரபிரதேச குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பிரீத்தி பரத்வாஜ் நேற்று (நவ.25) சம்மந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று 18 சிறுமிகளிடம் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 18 பெண் குழந்தைகள் ஆசிரியரால் ஏற்பட்ட கொடுமைகளைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சோழபுரம் நாட்டு வைத்தியர் வீட்டில் குவியலாக எலும்புக் கூடுகள்! போலீசாரின் மௌனத்தால் பொதுமக்கள் பீதி!

இது தொடர்பாக உத்தரபிரதேச குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பிரீத்தி பரத்வாஜ் கூறும் போது, "ஆசிரியர் மீது மானபங்கம் துன்புறுத்தல் உள்ளிட்ட பல புகார்கள் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமிகளிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஆசிரியருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் வழக்கை விசாரணை செய்த பிறகு மேலும் சில பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பராஸ்கவார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மின் விசிறியில் ஏற்பட்ட மின்சார கசிவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நான்கு குழந்தைகள் குறித்து மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் காவல் துறையினரிடம் தகவல் கேட்டு அறிந்ததாகவும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த நான்கு குழந்தைகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்".

18 குழந்தைகள் பள்ளி ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தீபாவளி சீட்டு மோசடி தொடங்கி.. தலைமறைவான நகைப் பட்டறை ஊழியர் கைது வரை.. சென்னை குற்றச் செய்திகள்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.