லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜீவ் ஓமர்.
இவர் குஜராத் மாநிலம், சூரத் நகரில் பிரதமர் மோடி, யோகி ஆதித்தியநாத் ஆகியோரது உருவப்படம் அச்சடிக்கப்பட்ட சேலைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நிறுவியுள்ளார்.
இதன்மூலம் பாஜக பெண் உறுப்பினர்கள் பரப்புரையின்போது இந்த வகையான சேலைகளை அணிந்து சென்று பரப்புரை செய்ய முடியும். கரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தால், நடைபயணம், பேரணி ஆகியவற்றிற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த சூழலில் தலைவர்கள் உருவப்படம் அச்சடிக்கப்பட்ட சேலைகள் அணிந்து பரப்புரை செய்வது மாற்றம் உண்டாக்கக் கூடும் என நம்பப்படுகிறது.
இந்த சேலைகள் அனைத்தும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் உத்தரப்பிரதேச சந்தையில் விற்பனைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
இதே மாதிரியான வேறு வகை சேலைகளும் பரப்புரைக்காக வெகு விரைவில் விற்பனைக்கு வரும் எனக் கூறுகின்றனர்.
இந்த வகை பரப்புரை சேலைகள் காவி மற்றும் பச்சை வண்ணங்களில் இருக்கும் என பாஜக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ராஜீவ் ஓமர் கூறுகையில், 'வரவிருக்கும் உத்தரப்பிரதேச தேர்தலை கருத்திற்கொண்டு பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்தியநாத் ஆகியோரது உருவப்படம் அச்சிடப்பட்ட சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. விரைவில் 10,000-க்கும் மேற்பட்ட சேலைகள் விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வரும்' எனக் கூறினார்.
மேலும், 'அந்த சேலைகளில் அயோத்தியில் அமைந்திருக்கும் ராமர் கோயிலின் புகைப்படமும், ராமர் கோயிலை நம்மிடம் சேர்த்தவர்களை நாம் தேர்ந்தெடுப்போம் போன்ற வாசகங்களும் சேலைகளில் அச்சிடப்பட்டுள்ளன' என ராஜீவ் ஓமர் கூறினார்.
இதையும் படிங்க: மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசு நிராகரித்த அலங்கார ஊர்திகள்